13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 13-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் விளையாடியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது, இதனால் முதலில் பேட்டிங் துவங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை எடுத்துள்ளது. இதன்மூலம் பஞ்சாப் அணிக்கு 192 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்.


இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி துவக்கம் முதலே விக்கெட்டுகளை பறிகொடுக்க ஆரமித்தது. அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்ட KL ராகுல், மயாங் அகர்வால், மாக்ஸ்வெல் உள்ளிட்டோர் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். நிகோலஸ் பூரான் மட்டுமே அதிகபட்சமாக 44 ரன்களை எடுத்திருந்தார். இதனால், 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. எனவே, 48 ரன்கள் வித்தியாசத்தில் தனது இரண்டாவது வெற்றியை பெற்றது மும்பை இந்தியன்ஸ்.
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…