13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின், இன்று நடைபெறும் இரண்டு போட்டிகளில் 20 -வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்து, முதலில் பேட்டிங்கை துவங்கியது. 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்து, 194 ரன்களை பெங்களுரு அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் ஜோஸ் பட்லர் மட்டுமே பொறுப்பாக விளையாடி 70 ரன்களை சேர்த்தார். இறுதியாக 18.1 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டு களையும் இழந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 57 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றிப்பெற்றுள்ளது. மேலும், மும்பை அணியில் ஜாஸ்பிரிட் பும்ரா அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.


செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…