13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின், இன்று நடைபெறும் இரண்டு போட்டிகளில் 17 -வது போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் களமிறங்கியது. 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்து, 209 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
இதனையடுத்து கடினமான இலக்கை நோக்கி பேட்டிங்கை துவங்கிய ஹைதரபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர்(60) அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரைத்தவிர மற்ற வீரர்கள் பெரிதாக கைக்கொடுக்காததால் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 174 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதன்மூலம் ரங்கள் 34 வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளது மும்பை அணி. மும்பை அணி தரப்பில் டிரன்ட் போல்ட், ஜேம்ஸ் பட்டின்சன் மற்றும் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...