13-வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 162 ரன்கள் எடுத்து, 163 ரன்களை சென்னைக்கு இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து பேட்டிங் செய்த சென்னை அணியில் அம்பாதி ராயுடு மற்றும் டூ பிளிசிஸ் அபார பேட்டிங்கால் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இப்போட்டியில் வெற்றிப் பெற்றதின் மூலம், ஐபிஎல் தொடரில் கேப்டனாக 100-வது வெற்றியை பதிவு செய்தார் தோனி. இதைத்தவிர, தோனி பிடித்த இரண்டு அட்டாகாச கேட்ச்கள் மூலம் ஐபிஎல் தொடரில் 100 கேட்ச்கள் என்கிற மைல்கல்லை அவர் அடைந்தார். இந்த இரண்டு சாதனைகளையும் அவரது ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.




தற்போதைய செய்திகள்:- ⮕ ஐபிஎல் தொடரில் கேப்டன் தோனியின் முதல் விக்கெட்! ⮕ தோனி சந்தித்த முதல் பந்தில் அவுட் கொடுத்த அம்பயர்! தோனி ரிவ்யூ சிஸ்டம் ⮕ ‘ரகிட ரகிட ஊ’ ஹர்பஜன்சிங்கின் ட்ரேட்மார்க் பாராட்டு |
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...