மூக்குத்தி அம்மன் திரைப்பட விமர்சனம் | Mookuthi Amman Movie Review

0
Mookuthi Amman Movie Review

படக்குழு:

நடிகர்கள்: நயன்தாரா, RJ பாலாஜி, ஊர்வசி, மௌலி, ஸ்ம்ருதி வெஙகட், அஜய் கோஷ் மற்றும் பலர்.

இசை: கிரீஸ்

ஒளிப்பதிவு: தினேஷ் கிருஷ்ணன்

எடிட்டிங்: R.K.செல்வா

தயாரிப்பு: வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்

இயக்கம்: RJ பாலாஜி & N.J. சரவணன்.

Mookuthi Amman Movie Review
Mookuthi Amman Movie Review

கதை சுறுக்கம்:

நாகர்கோயிலை கதைக்களமாக கொண்டு படம் நகர்கிறது, நாகர்கோயிலில் சுமார் 11 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வளைத்து போட நினைக்கும் போலி சாமியார். அதை 6 வருடங்களாக நியூஸ் கவரேஜ் செய்து தடுக்க நினைக்கும் நாயகன்(RJ பாலாஜி). இந்த கொடுமையை தடுக்க பாலாஜிக்கு உதவ அவதாரம் எடுக்கும் மூக்குத்தி அம்மன்(நயன்தாரா). இறுதியில் போலி சாமியாரின் முகத்திரையை கிழித்தார்களா? இல்லையா? என்பதே கதை சுருக்கம்.

Mookuthi Amman Movie Review
Mookuthi Amman Movie Review

FC விமர்சனம்:

தீபாவளி ஸ்பெஷலாக ஹாட்ஸ்டார் டிஸ்னியில் வெளியாகியுள்ளது இந்த மூக்குத்தி அம்மன். ‘லேடி சூப்பர்ஸ்டார்’ நயன்தாரா மூக்குத்தி அம்மனாக ஜொலிக்கிறார், கெட்அப்பிளும், குட்டி குட்டி முக பாவனைகளிலும், நக்கலிலும் ரசிக்க வைக்கிறார். காமெடியனாக வலம்வந்த RJ பாலாஜி இப்படத்தில் எமோஷனல் காட்சிகளும் தன்னால் முடியும் என்பதை காட்டியுள்ளார். தீபாவளிக்கு வெளியான சூரரைப் போற்று படத்தை தொடர்ந்து இப்படத்திலும் தனது நடிப்பு ஆளுமையை மீண்டும் நிரூபித்துள்ளார் ஊர்வசி. காமெடி, எமோஷனல் என இரண்டிலும் பட்டையை கிளப்பியுள்ளார்.

போலி சாமியாராக வரும் அஜய் கோஷ் பல இடங்கள் ரசிக்க வைத்தாலும், சில இடங்களில் ஓவர் ஆக்டிங் தலை தூக்குகிறது. இவர்களை அடுத்து பாலஜியின் தங்கையாக வரும் ஸ்ம்ருதி வெங்கட் கவனிக்க வைக்கிறார். பாடல்கள் & பின்னணி இசை ஓகே. ஒளிப்பதிவு, எடிட்டிங் & கலை பெரிய பலம். எல் கே ஜி படத்தைத் தொடர்ந்து கதை, திரைக்கதை, இயக்கத்தில் தனது வெற்றி முகத்தை மீண்டும் பதித்துள்ளார் RJ பாலாஜி. சமூக அக்கறையுடன் இதில் இடம்பெறும் காட்சிகளும் வசனங்களும் நச். வாழ்த்துக்கள் பாலாஜி & டீம். இறுதியாக, இந்த தீபாவளி விடுமுறைக்கு குடும்பத்துடன் ரசிக்கும் படமாக இந்த மூக்குத்தி அம்மன் அமைந்துள்ளது.

FC RATING: 3.5 /5