நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியது. இதுக்குறித்து தேமுதிக தலைமை கழகத்திலிருந்து செய்தி அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் கூறியுள்ளதாவது, “கழக தலைவர் கேப்டன் அவர்கள் வழக்கமாக 6 மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக சென்னை மியாட் மருத்துவமனைக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் சென்னை மியாட் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்ற கேப்டன் விஜயகாந்திற்கு லேசான கொரோனா அறிகுறி தென்பட்டது. இருப்பினும், உடனடியாக அது சரி செய்யப்பட்டுவிட்டது. தற்போது பூரண உடல் நலத்துடன் கேப்டன் விஜயகாந்த் உள்ளார் என தேமுதிக தலைமை கழகம் அறிவிப்பு” இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


இந்நிலையில் ‘விஜயகாந்த் சீக்கிரம் குணமடைந்து வர வேண்டும்’ திமுக தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, “தே.மு.தி.க. தலைவரும் அருமை நண்பருமான விஜயகாந்த் அவர்கள் உடல்நலக் குறைவினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்தேன். அவர் விரைவில் முழுநலம் பெற்று பொதுப்பணியில் மீண்டும் முழு உற்சாகத்துடன் செயல்பட வேண்டும் என்ற எனது பெருவிருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.
தே.மு.தி.க. தலைவரும் அருமை நண்பருமான @iVijayakant அவர்கள் உடல்நலக் குறைவினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்தேன்.
அவர் விரைவில் முழுநலம் பெற்று பொதுப்பணியில் மீண்டும் முழு உற்சாகத்துடன் செயல்பட வேண்டும் என்ற எனது பெருவிருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
— M.K.Stalin (@mkstalin) September 24, 2020
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...