திருச்சி, திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டத்திற்குள்பட்ட இனாம்குளத்தூர் ஊராட்சியில், பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளது. இந்த சமத்துவபுரம் முன்பாக இருந்த, தந்தை பெரியார் சிலை மீது காவி வர்ணம் ஊற்றியும், செருப்பு வீசியும் மர்மநபர்கள் அவமதிப்பு செய்துள்ளனர். இன்று அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள், பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்டு இருப்பதையும், செருப்பு மாலை அணிவிக்கப் பட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து சிலை அவமதிப்பில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இச்செயலை கண்டித்து பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதற்கு முக ஸ்டாலின், “பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்வதால் மக்களிடமிருந்து பறக்கணிக்கப்படுவோம் என்பதை உணர்வார்களா?. பெரியார் ஒரு இயக்கத்தின் தலைவர் அல்ல, தமிழ் இயக்கத்தின் தலைவர். பெரியாரை அவமதிப்பதாக நினைத்து செய்பவர்கள் தங்களை தாங்களே அவமரியாதை செய்துகொள்கிறார்கள்” என தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.
⮕ திருச்சியில் பெரியார் சிலை மீது காவி பூசி அவமதிப்பு!
ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்வதால் மேலும் மேலும் புறக்கணிக்கப்படுவோம் என்பதை இவர்கள் எப்போது புரிந்து கொள்வார்கள்?
திருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டிக்கிறேன்!
பெரியார் தமிழ் இனத்தின் தலைவர். அவரை அவமதிப்பதாகக் கருதி தங்களுக்கே அவமரியாதை செய்து கொள்கிறார்கள்! pic.twitter.com/56lYebnbvE
— M.K.Stalin (@mkstalin) September 27, 2020
⮕ இணையத்தில் வைரலாகும் நடிகை சமந்தா வொர்க்அவுட் படங்கள்
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...