தெரியாமல் சொல்லிவிட்டேன்! மிஸ் யூ விஷால் – மிஷ்கின் உருக்கம்:
விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகவிருந்த திரைப்படம் துப்பறிவாளன் 2. இப்படத்தின் படப்பிடிப்பின் போதே விஷாலுக்கும், மிஷ்கினுக்கும் மோதல் வெடித்தது. முடிவில் மிஷ்கின் படத்திலிருந்து விலகினார். இதைத் தொடர்ந்து சினிமா நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மிஷ்கின், மனதில் இருந்த ஆதங்கத்தை கடினமான வார்த்தைகளை பயன்படுத்தி விஷாலை திட்டி தீர்த்தார்.
மிஷ்கின் கூறிய வார்த்தைகள் பிறகு வைரல் வீடியோவாகவும், மீம்ஸ்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘அடியே’ டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துக்கொண்டு பேசிய மிஷ்கின் இதுக்குறித்து கூறியதாவது, “மீண்டும் மீண்டும் நான் பொறுக்கி என சொன்னதை சொல்லி கொண்டிருக்கிறீர்கள். நான் செய்த துரோகத்தை மறக்கமாட்டேன் என்று விஷால் சொல்லி கொண்டிருக்கிறார். அப்படி என்ன துரோகம் செய்துவிட்டேன். என் இதயத்திற்கு நெருக்கமானவர் விஷால்.


சண்டை போடாமல் எப்படி வாழ முடியும். நல்ல நட்பு அது. இருவரும் நட்பாக பழகி வந்தோம். நான் அவரை மிஸ் செய்கிறேன். ஆனால் அவர் என்னை மிஸ் செய்யமாட்டார். அவருக்கு ஈகோ அதிகம். எனக்கும் ஈகோ இருக்கிறது. ஆனால் அதை பொறுத்துக் கொள்வேன். பொறுக்கி என்று சொன்னது ஒரு கோபத்தில் சொன்ன வார்த்தை. ஆனால் விஷால் அப்படிப்பட்டவர் இல்லை. என்னுடன் அவர் பணியாற்றவில்லை என்றாலும் அவரது திரைப்படங்கள் வெற்றிப்பெற வாழ்த்துக்கள். இனி விஷாலுடன் படம் பண்ணவே மாட்டேன். எந்த நேரத்திலும் கெஞ்சிக் கொண்டிருக்க மாட்டேன்” என கூறி விளக்கமளித்துள்ளார்.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண