‘ஹர ஹர மகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ பட இயக்குனர் சந்தோஷ் P. ஜெயகுமார் இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் இரண்டாம் குத்து. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் துவங்கி டீசர் வரை ஆபாசத்தை அள்ளித் தெளித்து, முகம் சுழிக்கும் வகையில் அமைந்திருந்தால் பல்வேறு கண்டனங்கள் எழுந்தது. இந்நிலையில், தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரான படங்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: “தமிழ் கலாச்சாரம், பண்பாட்டை சீரழிக்கும் எந்த படமாக இருந்தாலும் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். திரைப்படங்களில் வரும் ஆபாச காட்சிகளை நீக்க மத்திய அரசுக்கும், சென்சார் போர்டுக்கும் வலியுறுத்தப்படும். அத்தகைய படத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும். மக்களுக்கு நல்ல கருத்துக்களைக் கூறும் சாதனமாக திரைப்படங்கள் இருக்க வேண்டும்”. என அவர் கூறியுள்ளார்.


செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...