தொழிலதிபருடன் முடிந்த நிச்சயம்! மகிழ்ச்சியில் மியா ஜார்ஜ்

0
Mia George to get Married with a Businessman

தமிழில் அமரகாவியம், இன்று நேற்று நாளை, வெற்றிவேல், எமன் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளவர் மியா ஜார்ஜ். 

Mia George to get Married with a Businessman
Mia George

மலையாள நடிகையான இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ‘ஒரு ஸ்மால் ஃபேமிலி’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், பத்து ஆண்டுகளில் சுமார் 35 படங்களில் நடித்துள்ளார். தற்போது கைவசம் மலையாளத்தில் ‘கண்மனில்லா’ மற்றும் காளிதாஸ் ஜெயராமுடன் ஒரு புதிய படத்திலும் நடித்து வருகிறார். மேலும், தமிழில் சியான் விக்ரமுடன் ‘கோப்ரா’ படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகிறார். 

Mia George to get Married with a Businessman
Mia George to get Married with a Businessman

சினிமா வாழ்க்கை இவ்வளவு பிசியாக ஒருபுறம் இருக்க, தனது திருமண வாழ்க்கைக் குறித்து அதிகாரப்பூர்வ தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதன்படி அஷ்வின் பிலிப் என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துக்கொள்ள போவதாகவும், மேலும் இவர்களது நிச்சயதார்த்தம் கேரளா கோட்டையத்தில் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளதாகவும் கூறியுள்ளார். வரும் செப்டம்பர் மாதம் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

Mia George to get Married with a Businessman
Mia George to get Married with a Businessman

‘மின்சார வாரியம் கட்டணக் கொள்ளையடிக்கிறார்கள்’ – பிரசன்னா ஆவேசம்

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…