மேட்டூர் அணையின் நீர் மட்டம் உயர்வு! டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி:
தமிழ்நாடு, டெல்டா பாசனத்திற்காக கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்துவிட்டார். ஆனால் உரிய நேரம் கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு மாதம்தோறும் திறந்து விடப்படும் தண்ணீர் வழங்கப்படாததால், மேட்டூர் அணையின் நீர்மட்டமானது தொடர்ந்து சரிந்து வந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளின் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் முதற் கட்டமாக கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு நேற்று முன்தினம் 5000 கன அடி நீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அங்குள்ள இரு அணைகளுக்கும் தொடர்ந்து தண்ணீர் அதிகரித்து வந்ததன் காரணமாக, அணையின் பாதுகாப்பு கருதி தொடர்ந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.


நேற்று மாலை நிலவரப்படி இரு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் 17,500 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில், நேற்றிரவு அது 23,000 கன அடியாக அதிகரித்தது. இந்த நிலையில் தமிழக எல்லையான பிலிகுண்டுவுக்கு இன்று காலை 6 மணி நிலவரப்படி 5, 100 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஒகேனக்கலில் வரும் நீரானது இன்று நண்பகலில் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் மேட்டூர் அணைக்கு வரக்கூடிய தண்ணீரின் அளவானது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் தற்போது நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 177 கன அடியாக உள்ளது. இதனால் நேற்றுவரை 10,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், இன்று மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக 12,000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. விவசாயத்திற்கு போதியளவு தண்ணீர் கிடைத்து வருவதால் காவிரி டெல்டா பாசம் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர், இயற்கைக்கு நன்றியும் கூறி வருகின்றனர்.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண