‘என் மூச்சு இருக்கும்வரை நீயும் வாழ்வாய்’ மேக்னா ராஜ் உருக்கமான பதிவு

0
Meghana Raj's heartfelt notes to Chiranjeevi Sarja

பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா, தனது 39 வயதிலே மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இது கன்னட திரையுலகம் மட்டுமில்லாமல் மொத்த திரையுலகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது. இதில் உச்சக்கட்ட சோகம் என்னவென்றால் இவரது மனைவி மேக்னா ராஜ் கர்ப்பமாக இருக்கிறார், பிறக்கபோகும் அவரது குழந்தையின் முகம் பார்ப்பதற்கு முன்பே மரணமடைந்துள்ளார் சிரஞ்சீவி. 

Meghana Raj's heartfelt notes to Chiranjeevi Sarja
Chiranjeevi Sarja

இந்நிலையில் சிரஞ்சீவி – மேக்னா ராஜ் நீண்ட காலம் காதலித்து திருமணம் செய்துக்கொண்டவர்கள், இந்நிலையில் கணவரை பிரிந்து வாடும் மேக்னா, கணவர் குறித்து டுவிட்டரில் கடிதம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது, ” சிரு, நான் உன்னிடம் சொல்ல நினைத்ததை வார்த்தைகளாக்கி சொல்ல மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறேன், ஆனால் என்னால் அது முடியவில்லை. நீ எனக்கு எவ்வளவு முக்கியம் என்பதை இந்த உலகிலிருக்கும் அத்தனை வார்த்தைகளைச் சேர்த்தாலும் விவரிக்க முடியாது. என் நண்பன், என் காதலன், என் பார்ட்னர், என் குழந்தை, என் நம்பிக்கைக்குரியவர், என் கணவர், இவை அனைத்தையும் விட மேலானவன் நீ. என் ஆன்மாவின் ஒரு அங்கம் நீ. நான் ஒவ்வொரு முறையும் வாசல் கதவைப் பார்க்கும்போதும் இனம் கண்டுகொள்ள முடியாத ஒரு வலி என் ஆன்மாவைத் தாக்குகிறது.

Meghana Raj's heartfelt notes to Chiranjeevi Sarja
Meghana Raj – Chiranjeevi Sarja

நீ உள்ளே நுழைந்து நான் வீட்டிற்கு வந்துவிட்டேன் என்று சொல்வதை பார்க்க முடியவில்லையே என்று. ஒரு நாளின் ஒவ்வொரு நிமிடமும் உன்னைத் தொட முடியாததை உணரும்போது, என் இதயம் மூழ்குவது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது. நான் சோர்வடையும் போதெல்லாம் நீ என்னைக் காக்கும் தேவதையாக என்னைச் சுற்றி இருக்கிறாய். நீ என்மீது அளவில்லா காதல் வைத்திருப்பதால்தான் உன்னால் என்னைத் தனியாக விட்டுப் போக முடியவில்லை. இல்லையா? நம் காதலின் சின்னமாக, நீ எனக்குத் தந்த விலை மதிப்பில்லா பரிசுதான் நம் குழந்தை.

Meghana Raj's heartfelt notes to Chiranjeevi Sarja
Meghana Raj – Chiranjeevi Sarja

அந்த இனிய அற்புதத்துக்காக நான் என்றென்றும் உனக்கு நன்றிக்கடன் பட்டிருப்பேன். உன்னை நம் குழந்தை வடிவில் இந்த பூமிக்குக் மீண்டும் கொண்டு வரும் நாளை ஆவலோடு எதிர்நோக்கியுள்ளேன். மீண்டும் உன்னை குழந்தையாக என் கையில் ஏந்தும் நாளுக்காக காத்திருக்கிறேன். உன் சிரிப்பை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். அறையையே ஒளிரச் செய்யும் உன் சிரிப்பைக் கேட்க ஆவலுடன் உள்ளேன். நான் உங்களுக்காகக் காத்திருக்கிறேன். நீங்களும்  எனக்காகக் காத்திரு. என் மூச்சு இருக்கும்வரை நீயும் வாழ்வாய். நீ என்னுளே தான் இருக்கிறாய்” என தனது வருத்தத்தை உருக்கமாக பதிவிட்டுள்ளார். 

 

———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்  

 

 

👉 ‘சுஷாந்த் மரணத்திற்கு இது தான் காரணம்’ கங்கனா ரனாவத் குற்றச்சாட்டு

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...