த்ரிஷாவை எச்சரித்த மீரா மிதுன்! ஏன் எப்படி என ரசிகர்கள் காட்டம்

0
Meera Mitun Warns Trisha Krishnan on Twitter

தானா சேர்ந்த கூட்டம், எட்டு தோட்டாக்கள் மற்றும் போதை ஏறி புத்தி மாறி ஆகிய படங்களில் நடித்துள்ளவர் நடிகை மீரா மிதுன். ஆனால் இதில் எந்த படமும் இவருக்கு பெரிய பெயரை வாங்கி கொடுக்கவில்லை என்றாலும், பிக்பாஸ், சர்ச்சை பேச்சுக்கள், புகார்கள் ஆகியவற்றால் பிரபலமானார்.

Meera Mitun Warns Trisha Krishnan on Twitter
Meera Mitun

அதேபோல் டுவிட்டரில் யாரையாவது வம்புக்கு இழுப்பது இவரது வாடிக்கை, அந்த வகையில் தற்போது த்ரிஷாவை கண்டித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார் மீராமிதுன். தமிழ் சினிமாவில் சுமார் 20 வருடங்களாக தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து முன்னணி நடிகையாக வளம் வருகிறார். அவர் சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய புகைப்படம் ஒன்றை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அது ரசிகர்களுக்கு பிடித்து போக வழக்கம்போல் லைக்ஸ்களை வாரிக்குவித்தது. 

Meera Mitun Warns Trisha Krishnan on Twitter
Trisha Krishnan

இதைக் கண்ட மீரா மிதுன் “த்ரிஷா இது தான் உங்களுக்கு கடைசி எச்சரிக்கையாக இருக்கப் போகிறது. அடுத்த முறை நீங்கள் உங்களுடைய புகைப்படத்தை போட்டோஷாப் செய்து என்னை போலவே இருப்பதற்காக முடி உள்ளிட்டவற்றை மார்பிங் செய்து புகைப்படங்களை வெளியிட்டால் நான் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியும். உங்கள் மனசாட்சிக்கு தெரியும் என நினைக்கிறேன். வளருங்கள். உங்களுக்கு என்று ஒரு வாழ்க்கையை தேடி கொள்ளுங்கள்” என கண்டன குரல் எழுப்பியுள்ளார். இதைக்கண்ட ரசிகர்கள் என்ன ஆச்சு உனக்கு? ஏன் எப்படி? முத்திடுச்சா? என பலரும் மீரா மிதுனை வறுத்தெடுத்து வருகின்றனர். 

Twitter Feed:

 

 * புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய வரலட்சுமி சரத்குமார்

* மருத்துவமனையில் நடிகர் பொன்னம்பலம் உதவிக்கரம் நீட்டிய கமல்ஹாசன்!

* சிவப்பு உடையில் பளபளக்கும் அழகு! சஞ்சிதா ஷெட்டி லேட்டஸ்ட் படங்கள்

* 50 சதவிகித சம்பளத்தை குறைத்து கொண்ட ரகுல் ப்ரீத் சிங்!

* அனுபமா பரமேஸ்வரன் லேட்டஸ்ட் அழகிய படங்கள்

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…