‘மாஸ்டர்’ கொண்டாட்டம் தியேட்டர்களில் தான்! தயாரிப்பு நிறுவனம்

0
Master Movie Release on Theatres

‘தளபதி’ விஜய் & ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். கடந்த ஏப்ரல் மாதமே இப்படம் வெளியாகவிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் தள்ளிப்போனது. இந்நிலையில் மாஸ்டர் படம் OTT-ல் வெளியாகவுள்ளதாக செய்திகள் தீயாய் பரவியது. இதனால் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி தியேட்டர்கள் தரப்பிலும் குழம்பி பொய் இருந்தனர், ஆனால் தற்போது அந்த குழப்பம் நீங்கியுள்ளது. மாஸ்டர் படக்குழுவினர் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில், ரசிகர்கள் எதிர்பார்க்கும் அந்த மிகப்பெரிய நாள் விரைவில் வரும் என நாங்களும் காத்திருக்கிறோம். ஓடிடி தளத்தில் இருந்து எங்களை அணுகியபோதும் திரையரங்கில் வெளியிடவே நாங்கள் விரும்புகிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்ததுபோல் தியேட்டரில் வெளியாவதை படக்குழுவினர் உறுதி செய்திருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளார்கள்.

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...