‘பட்டம் போலே’ என்கிற மலையாள படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன், தமிழில் இவரது அறிமுகமே சூப்பர்ஸ்டாருடன் தான். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான பேட்ட படத்தில் பூங்கொடி கதாப்பாத்திரம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.


இப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஒரு பிரம்மாண்டமான படத்தில் இணைந்தார் மாளவிகா, அதுதான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் – மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘மாஸ்டர்’. மே மாதமே வெளியாகவிருந்த இப்படம் கொரோனா தாண்டவத்தால் முற்றிலும் தள்ளிப்போனது. தற்போது இந்த ஆண்டு தீபாவளி வெளியீடாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மாஸ்டர் பட ரிலீஸை எதிர்நோக்கி காத்திருக்கும் மாளவிகா மோகனனின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் அடுத்த படம் தமிழில் இல்லை ஹிந்தியில், எக்ஸெல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் ரவி உதயவர்(Ravi Udhyawar) இயக்கத்தில், சித்தாந்த் சதுர்வேதி ஜோடியாக நடிக்கவுள்ளார் மாளவிகா. இப்படத்தில் மாளவிகாவிற்கு ஆக்ஷன் காட்சிகள் உள்ளதால் மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு மாளவிகா மோகனன் ‘பியாண்ட் த கிளவுட்ஸ்’ படத்தின் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமாகி இருந்தார். ஆக இது அவருக்கு இரண்டாவது பாலிவுட் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்
👉 தர்ஷா குப்தா லேட்டஸ்ட் அட்டகாச படங்கள்
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...