‘மார்க் ஆண்டனி’ திரைப்பட விமர்சனம் | Mark Antony Movie Review

0
Mark Antony Movie Review
Mark Antony Movie Review

‘மார்க் ஆண்டனி’ திரைப்பட விமர்சனம் | Mark Antony Movie Review

படக்குழு:

நடிகர்கள்: விஷால், SJ சூர்யா, ரிது வர்மா, செல்வராகவன், சுனில், அபிநயா மற்றும் பலர்.

இசை: ஜி.வி.பிரகாஷ்

ஒளிப்பதிவு: அபிநந்தன் ராமானுஜம்

எடிட்டிங்: விஜய் வேலுகுட்டி

தயாரிப்பு: மினி ஸ்டுடியோஸ்

இயக்கம்: ஆதிக் ரவிசந்திரன்.

Mark Antony Movie Review
Mark Antony Movie Review

கதைச்சுருக்கம்:

கதையின் துவக்கத்தில் கடந்த காலத்திற்கு பேசும் வகையில் ஒரு ஃபோனை ஒருவர் கண்டுபிடிக்க, அந்த ஃபோன் ஒருக்கட்டத்தில் ஹீரோ கைக்கு செல்கிறது. ஹீரோ அந்த ஃபோனை பயன்படுத்தி கடந்த காலத்தில் இருக்கும் அவரது அப்பாவிடம் பேச ஆசைப்பட்டு முயற்சி செய்கிறார். அப்படி பேச போக, ஹீரோ சந்திக்கும் பிரச்சனைகள் என்ன? ஹீரோவின் அப்பா யார்? இறுதியாக ஹீரோ பிரச்சனைகளை எப்படி சமாளித்தார்? என்பதே கதைச்சுருக்கம்.

FC விமர்சனம்:

விஷால், SJ சூர்யா நடிப்பில் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ & ‘AAA’ படங்களை இயக்கிய ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் இன்று(செப்.15) வெளியாகியிருக்கும் ‘மார்க் ஆண்டனி’ படம் எப்படி இருக்கு வாருங்கள் விமர்சனத்திற்குள் சென்று பார்ப்போம். நடிகர்களை பொறுத்தவரை, இப்படத்தின் ஹீரோ விஷாலாக இருந்தாலும், அதிகளவு ஸ்கோர் செய்து மிரட்டியுள்ளார் SJ சூர்யா. அவர் வரும் காட்சிகள் பெரும்பாலும் தியேட்டர்களில் கைதட்டல் ஆரவாரம் தான். (குறிப்பாக சில்க் ஸ்மிதா வரும் காட்சி, அப்பா, இடைவேளை காட்சி, மகன் SJ சூர்யாவிடம் பேசிக்கொள்ளும் காட்சிகள் செம) அந்தளவு படத்தை தனி மனிதனாக தாங்கி பிடித்துள்ளார். தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக SJ சூர்யா மாறிவிட்டார் என்பதில் சந்தேகமில்லை. விஷால், இதுவரை பாத்திராத உழைப்பு இப்படத்தில் தெரிகிறது. அந்தளவிற்கு குறையில்லாமல் நடித்து கொடுத்துள்ளார். அதிலும், ஆண்டனி பாத்திரத்திற்கான குரல் மாடுலேஷன் அருமை.

Mark Antony Movie Review
Mark Antony Movie Review

இவர்களை தவிர, நாயகி ரிது வர்மா (பெயரளவில்) வந்து செல்கிறார். செல்வராகவன், சுனில், நிழல்கள் ரவி ஆகியோர் சிறிது நேரமே வந்தாலும், படத்திற்கு தேவையானவற்றை நேர்த்தியாக கொடுத்துள்ளனர். இப்படத்தின் மற்றுமொரு பெரிய பலம் எடிட்டர் விஜய் வேலுகுட்டி, விறுவிறுப்பு குறையாமல் இரண்டரை மணி நேரம் நம்மை கண் இமைக்காத அளவிற்கு எடிட்டிங்கில் மேஜிக் செய்து காட்டியுள்ளார். ஜிவி பிரகாஷின் இசையில் பாடல்கள் ஒகே என்றாலும், பின்னணி இசையில் அதகளம் செய்துள்ளார். குறிப்பாக படத்திற்கான ஒரு தீம் மியூசிக் ஒன்று வரும் காட்சிகள் அனைத்துமே தியேட்டர்களில் விசில் சத்தம்தான்…

அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவு, இரண்டு காலக் கட்டங்களையும் நம்பகத் தன்மையோடு நம்மை ஓட்டவைக்கிறது. அதேபோல் கலை இயக்குனர் & அவரது டீமிற்கும் இந்த பெருமை சேரும். ‘AAA’ படத்தின் மூலம் வாழ்கையை தொலைத்த ஆதிக் ரவிசந்திரன் அதிலிருந்து மீண்டெழ பெரும் முயற்சி எடுத்துள்ளார் என்பது இப்படத்தின் திரைக்கதையில் தெரிகிறது. டைம் டிராவல் களம் அதற்குள் கேங்ஸ்டர் கதாப்பாத்திரங்கள், அதை மக்களுக்கு புரியும் வகையிலும், ரசிக்கும் வகையிலும் சொல்ல வேண்டும், இரண்டு காலக் கட்டங்களுக்கான வேறுபாடுகளை காட்சிகள் மூலம் கடத்த வேண்டுமென பல்வேறு விஷயங்களை மிக நேர்த்தியாகவே செய்துள்ளார். இதில் மேலும் பலத்தை சேர்க்க படம் நெடுகிலும் அஜித் பெயரை பயன்படுத்தி, அவரது ரசிகர்களை ஈர்க்க நினைத்துள்ளார். அதுவும் நன்றாகவே வேலை செய்திருக்கிறது என்றே சொல்லலாம்.

Mark Antony Movie Review
Mark Antony Movie Review

படத்தின் குறையாக தெரிவது, வேகமாக செல்லும் திரைக்கதையால், இதில் வரும் எமோஷனல் காட்சிகள் எதுவும் நம்முடன் ஒட்டவில்லை. அந்தளவிற்கு படபட வென்று காட்சிகள் நகர்கிறது. மேலும் முதல் பாதியில் மட்டும் சில இடங்கள் டல்லாக செல்கிறது. (கமெர்ஷியல் அதிலும் டைம் டிராவல் என்றாலே லாஜிக் மீறல்கள் இருக்கத்தானே செய்யும்…) மொத்தமாக படம் எப்படி என்றால், கண்டிப்பாக தியேட்டருக்கு குடும்பத்துடன் சென்று என்ஜாய் பண்ணும் சம்பவமாக இந்த ‘மார்க் ஆண்டனி’ அமைந்துள்ளது.

One Word Review: WORTH WATCH

Mark Antony Movie Film Crazy Rating: 3.5 /5

 

 

இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண