இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த படம் ‘வாழை’

0
Mari Selvaraj's next movie titled as Vaazhai
Mari Selvaraj's next movie titled as Vaazhai

இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த படம் ‘வாழை’: பரியேரும் பெருமாள் என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். முதல் படத்திலேயே சிறந்த இயக்குனர்கள் பட்டியலில் இணைந்த மாரி செல்வராஜ், இரண்டாவது படமான கர்ணனில் தனுஷுடன் கைகோர்த்தார்.

இப்படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார். போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தனது அடுத்த படத்தில் வேளைகளில் முனைப்பு காட்ட துவங்கியுள்ளார் மாரி செல்வராஜ். டிஸ்னி ஹாட்ஸ்டார் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கவுள்ள படத்தில் கலையரசன், நிகிலா விமல் முன்னணி பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். ‘வாழை’ என பெயரிட்டுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். மேலும் தற்போது இப்படத்தின் முதல் பார்வை(First look) வெளியாகியுள்ளது.

Mari Selvaraj's next movie titled as Vaazhai
Mari Selvaraj’s next movie titled as Vaazhai
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here