‘மரைக்காயர் – அரபிக்கடலின் சிங்கம்’ திரைப்பட விமர்சனம்

0
Marakkar Lion of the Arabian Sea Movie Review and Rating
Marakkar Lion of the Arabian Sea Movie Review and Rating

மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் திரைப்பட விமர்சனம்

படக்குழு:

நடிகர்கள் – மோகன்லால், மஞ்சு வாரியார், அர்ஜுன், பிரபு, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், பிரணவ் மோகன்லால் மற்றும் பலர்.

இசை: ராகுல் ராஜ், அங்கிட் சுரி, லயேல் ஈவன்ஸ், ரோனி ராபல்

ஒளிப்பதிவு: திரு

எடிட்டிங்: M.S.ஐயப்பன் நாயர்

தயாரிப்பு: ஆஷிர்வாத் சினிமாஸ்

இயக்கம்: பிரியதர்ஷன்.

Marakkar Arabikadalinte Simham Movie HD Stills
Marakkar Arabikadalinte Simham Movie HD Stills

கதைச்சுருக்கம்:

குஞ்சாலி மரைக்காயர் எனும் போர் தளபதி, போராளியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. கேரளா, கோழிகோட்டில் வணிகம் செய்ய வந்து அட்டகாசம் செய்த போர்ச்சுக்கீசியர்களுக்கும், குஞ்சாலி மரைக்காயருக்கும் இடையே நடக்கும் போரே படத்தின் முழுக்கத்தை. இதில் கடைசியாக மரைக்காயர் வென்றாரா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.

Marakkar Arabikadalinte Simham Movie HD Stills
Marakkar Arabikadalinte Simham Movie HD Stills

FC விமர்சனம்:

ஒரு போர் வீரரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்த கதை என்றாலே சுவார்ஸ்யத்திற்கு பஞ்சமில்லை, அதிலும் மிக பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளத்தால் இன்னும் அதிக எதிர்ப்பார்ப்பு இப்படத்தின் மீது எழுந்தது. அந்த எதிர்பார்ப்பை மரைக்காயர் பூர்த்தி செய்ததா என்பதை பார்ப்போம். முதலில் மோகன்லால் உண்மையில் படத்தை முழுமையாக தாங்கி பிடிப்பவர் இவர்தான், அவ்வளவு நேர்த்தியான நடிப்பு, கரிஷ்மா படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்கிறது. மற்ற நடிகர்கள் சுனில் ஷெட்டி, அர்ஜுன், பிரபு, மஞ்சு வாரியார், கீர்த்தி சுரேஷ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரணவ் மோகன்லால் என அனைவருமே கொடுத்த பாத்திரங்களை நிறைவாக செய்துள்ளனர். (ஆனால் என்ன அவர்களுக்கு சொல்லுபடியான அழுத்தம் தரும் காட்சிகளோ, வாய்ப்போ இப்படத்தில் இல்லை).

திருநாவுக்கரசு(திரு) அவர்களின் பிரம்மாண்ட ஒளிப்பதிவும், சாபு சிரில் அவர்களின் கலையும், காஸ்ட்யூம் டிசைனர்களின் உழைப்பும் நம்மை அந்த காலக்கட்டத்திற்கு அழைத்து செல்கிறது. அவ்வளவு நேர்த்தி. அதேபோல் இப்படத்தின் சண்டைக் காட்சிகளும் ரசிக்கும்படி தான் அமைந்துள்ளது. இசையை பொறுத்தளவு ஓகே ரகம்தான். எல்லாம் சரிதான், இவ்வளவு நிறைகள் இருந்தாலும் படத்தின் நீளமும், மெதுவாக செல்லும் திரைக்கதையும் படத்தின் பெரிய குறையாக வந்துள்ளது. குறிப்பாக படம் ஆரமித்து முதல் 45 நிமிடம் வரை மோகன்லாலின் சிறு வயது பாத்திரம் வரும், அதெல்லாம் சற்று குறைத்திருக்கலாம். பொதுவாகவே இயக்குனர் ப்ரியதர்ஷன் மேக்கிங் இப்படிதான் இருக்கும் என்றாலும், இவ்வளவு பெரிய பட்ஜெட், நட்சத்திர பட்டாளம் இருக்கும்போது கொஞ்சம் சுவாரஸ்யமாக கொடுத்திருக்கலாம்.  அதேபோல் படத்தின் VFX பணிகளையும் இன்னும் நேர்த்தியாக கொடுத்திருக்கலாம். இறுதியாக படன் எப்படி என்றால், டெக்னிக்கல் விஷயங்களுக்காக ஒரு முறை பார்க்கலாம், மற்றபடி ஆவரேஜ் ரகம்தான்…

   Marakkar Lion of the Arabian Sea Movie FC Rating: 2.5 /5   

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்