“ஜெயிலர் படத்தில் ஒரு வெங்காயமும் இல்லை” மன்சூர் அலிகான் ஆவேசம்

0
Mansoor Ali Khan latest speech about Jailer
Mansoor Ali Khan latest speech about Jailer

“ஜெயிலர் படத்தில் ஒரு வெங்காயமும் இல்லை” மன்சூர் அலிகான் ஆவேசம்: 

நடிகர் மன்சூர் அலிகான் தற்போது சொந்தமாக ‘சரக்கு’ என்கிற படத்தை தயாரித்து நடித்து முடித்துள்ளார். ரிலீஸிற்கு தயாராகவுள்ள இப்படம் சமீபத்தில் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. இப்படத்தைப் பார்த்து ஏராளமான காட்சிகள், வசனங்களை நீக்க சொல்லியுள்ளது தணிக்கை வாரியம்.

இதைக்கண்டு ஆவேசமடைந்த மன்சூர் அலிகான் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியுள்ளதாவது, “சரக்கு படம் பார்த்துவிட்டு நீண்ட லிஸ்ட் கொடுத்தார்கள். இதெல்லாம் கட் பண்ண வேண்டும் என்று. நான் இதையெல்லாம் எடுத்தா படமே இருக்காதுங்க என சொன்னேன். உதாரணத்துக்கு இதுல அம்பானி, அதானி இந்த பெயர்கள்லாம் வருது. இருக்கக்கூடாது என்றார்கள். நான் ஏன் இருக்கக்கூடாது எனக் கேட்டேன். அவங்க தனிப்பட்ட நபர்கள் என்கிறார்கள். அவர்கள் வேணும்னா என் மேல கேஸ் போடட்டும். உலகத்துல இருக்க எல்லாருக்குமே இது தெரியும்.

Mansoor Ali Khan latest speech about Jailer
Mansoor Ali Khan latest speech about Jailer

பல லட்சம் கோடி நம் வரிப்பணத்த அவர்களுக்கு டிஸ்கவுண்ட் செய்யறாங்க, ஏழைகளுக்கு தரதில்லை. சுதந்திர நாட்டுல 300, 400 வருஷமா இருக்க பொத்துறையான ரயில்வே, கப்பல் துறைமுகம், ஏர்போர்ட் எல்லாத்தையும் இப்படிபண்றாங்க. மேலும், காவாலா பாடல எப்படி அனுமதிச்சாங்க? பாடல் வரிகளே “வா வா ராத்திரிக்கு ரா ரா”னு இருக்கு. மூவ்ண்ட்ஸ் மோசமா இருக்கு. அதை மட்டும் காண்பித்தார்களா இல்லையா? பெரிய படத்துக்கு ஒரு அளவுகோல். அந்த ஒரு பாட்ட வச்சு தான் படமே ஓடுச்சு. மத்தபடி அந்தப் படத்துல ஒரு வெங்காயமும் இல்ல. என்னால இத பண்ண முடியாதா.. தமன்னா இடத்துல ஒரு கமன்னாவ வச்சு 10 லட்சம் கொடுத்து ஆட வைக்க முடியாதா? ஆனால் இவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். பெரிய ஆள் வயசாகி நடிச்சா அனுமதிப்பார்கள். இது என்ன அளவுகோல். நானும் கவர்ச்சியா எடுக்கவா?” என ஆவேசமாக பேசியுள்ளார். இந்த கருத்து தற்போது இணையத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தவறவிடாதீர்!

லியோ முதல் நாள் வசூல் இவ்வளவா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அஜித்தின் ‘விடாமுயற்சி’யில் இணைந்த பிரபல நடிகை! யாருன்னு பாருங்க…

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ‘புலிமடா’ மலையாள பட ட்ரைலர் இதோ

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0