‘மன்னிப்பு’ பாடல் வரிகள்| Mannippu Song Lyrics in Tamil – Kanguva

8
Mannippu Song Lyrics in Tamil
Mannippu Song Lyrics in Tamil

‘மன்னிப்பு’ பாடல் வரிகள்| Mannippu Song

தமிழ் வரிகள்:

குழு: ஆராரோ ஆரிராரோ
ஆராரி ராரோ
ஆராரோ ஆரிராரோ
ஆரோ ஆரோ ஆராரோ
ஆராரோ ஆரிராரோ
ஆராரி ராரோ
ஆராரோ ஆராரோ
ஆரோ ஆரோ ஆரிராரோ

ஆண்: தன்னை தோண்டும் மனிதனுக்கே
தாகம் தீர்க்கும் மண்ணை பார்
வெட்டி சாய்க்கும் பகைவனுக்கே
நிழலை கொடுக்கும் மரத்தை பார்

ஆண்: காம்பை கொய்த காற்றுக்கே
வாசம் சேர்க்கும் பூவை பார்
சேதம் உளியால் செய்யும் கைக்கே
சிலை கொடுக்கும் கல்லை பார்

ஆண்: மன்னிப்பு இல்லாமலே
மண்மீதிலே ஏதும் இல்லை
மன்னித்த பின்னாலே
நெஞ்சில் என்றும் பாரம் இல்லை

ஆண்: மன்னிப்பு இல்லாமலே
மண்மீதிலே ஏதும் இல்லை
மன்னித்த பின்னாலே
நெஞ்சில் என்றும் பாரம் இல்லை

குழு:ஆராரோ ஆரிராரோ
ஆராரி ராரோ
ஆராரோ ஆரிராரோ
ஆரோ ஆரோ ஆராரோ
ஆராரோ ஆரிராரோ
ஆராரி ராரோ
ஆராரோ ஆராரோ
ஆரோ ஆரோ ஆரிராரோ

ஆண்: அந்த ஓரக்கடலின்
சீறும் அலையாய்
மோதும் உள்ளே வஞ்சம்
ஓர் ஆழ கடலின்
அமைதி கொள்ளும்
மன்னிக்கும் நெஞ்சம்

ஆண்: அட பிழைகள் செய்தும்
பிழையாய் செய்தும்
கற்றான் மனிதன் கொஞ்சம்
தவறுக்கெல்லாம் தண்டித்தால்
வெறும் சாம்பல் தான் மிஞ்சும்

ஆண்: இலை என்னும் கண்ணீர் சிந்த
மரம் செய்த பாவம் என்ன
இளவேனிற் காலம் வந்து
பூக்கள் நீட்டி புன்னகை செய்கிறதே

ஆண்: மன்னிப்பு இல்லாமலே
மண்மீதிலே ஏதும் இல்லை
மன்னித்த பின்னாலே
நெஞ்சில் என்றும் பாரம் இல்லை

ஆண்: மன்னிப்பு இல்லாமலே
மண்மீதிலே ஏதும் இல்லை
மன்னித்த பின்னாலே
நெஞ்சில் என்றும் பாரம் இல்லை

குழு:ஆராரோ ஆரிராரோ
ஆராரி ராரோ
ஆராரோ ஆரிராரோ
ஆரோ ஆரோ ஆராரோ
ஆராரோ ஆரிராரோ
ஆராரி ராரோ
ஆராரோ ஆரிராரோ
ஆரோ ஆரோ ஆராரோ

ஆண்: ஒரு யானை சாணம் வெப்பத்திலே
அது போன தூரம் சொல்வேன்
கால் தடத்தின் ஆழம் பார்தே
புலியின் எடை என்ன சொல்வேன்

ஆண்: ஒரு தட்டான் பூச்சி வருகையிலே
மழை கொட்டும் தருணம் சொல்வேன்
சிறு குருவி போகும் திசையை கொண்டே
அருவி எங்கே சொல்வேன்

ஆண்: அசையும் இப்பெறுவனம் எல்லாம்
அறிவேனே துல்லியமாக
அறியா மகன் உன் மனம் மட்டும்
புரியா புதிராய் ஒன்றும் தெரியவில்லை

ஆண்: மன்னிப்பு இல்லாமலே
மண்மீதிலே ஏதும் இல்லை
மன்னித்த பின்னாலே
நெஞ்சில் என்றும் பாரம் இல்லை

ஆண்: மன்னிப்பு இல்லாமலே
மண்மீதிலே ஏதும் இல்லை
மன்னித்த பின்னாலே
நெஞ்சில் என்றும் பாரம் இல்லை

குழு: ஆராரோ ஆரிராரோ
ஆராரி ராரோ
ஆராரோ ஆராரோ
ஆரோ ஆரோ ஆரிராரோ
ஆராரோ ஆராரோ
ஆராரி ராரோ
ஆராரோ ஆரிராரோ
ஆரோ ஆரோ ஆராரோ…

பாடல் விவரம்:

திரைப்படம்: கங்குவா

இசை: தேவி ஸ்ரீ பிரசாத்

பாடியவர்கள்: ரகு தீக்சித்

பாடலாசியர்: விவேகா.

 

சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…