கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கி கிடந்த பிரபலங்கள் தற்போது படப்பிடிப்பிற்கும், சுற்றுலா செல்வத்திற்கும் வழக்கம்போல் துவங்கி விட்டனர். இது பெரிய விஷயம் இல்லை தான் ஆனால், பெரும்பாலான நடிகைகள் ஒரே இடத்தில் முகாமிட்டுள்ளது சற்று ஆச்சர்யமளிக்கும் விதமாக அமைந்துள்ளது. முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால் சமீபத்தில் கௌதம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் தேனிலவை கொண்டாடுவதற்காக மாலத்தீவுக்கு சென்றிருக்கிறார்கள். அதுபோல் முன்னணி நடிகையான சமந்தாவும் தனது கணவர் நாக சைதன்யாவுடன் விடுமுறையைக் கொண்டாட மாலத்தீவு சென்றுள்ளார். இவர்களை தவிர நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், வேதிகா, மெஹரீன் பிர்சாடா, சோனாக்ஷி சின்ஹா உள்ளிட்டோர் மாலதீவ் சென்று, தங்களது சந்தோஷ தருணங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகின்றனர்.










செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...