‘பட்டம் போலே’ என்கிற மலையாள படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன், தமிழில் இவரது அறிமுகமே சூப்பர்ஸ்டாருடன் தான். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான பேட்ட படத்தில் பூங்கொடி கதாப்பாத்திரம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.


இப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஒரு பிரம்மாண்டமான படத்தில் இணைந்தார் மாளவிகா, அதுதான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் – மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘மாஸ்டர்’. மே மாதமே வெளியாகவிருந்த இப்படம் கொரோனா தாண்டவத்தால் முற்றிலும் தள்ளிப்போனது. தற்போது இந்த ஆண்டு தீபாவளி வெளியீடாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அடுத்து அதிக சம்பளத்துடன் ஹிந்தி படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் மாளவிகா, இந்நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட்டுள்ளார். நீச்சல் உடையில் இருக்கும் அந்த படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


செல்வராகவன் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘சாணிக் காயிதம்’! மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக்
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...