14 வயதில் நான் சந்தித்த நிறவெறி சம்பவம் – மாளவிகா மோகனன்

0
Malavika Mohanan recalls her experience with racism

ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன், தான் சிறுவயதில் சந்தித்த நிறவெறி சம்பவம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Malavika Mohanan recalls her experience with racism
Malavika Mohanan

அமெரிக்காவில் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்தால் உலகளவில் நிறவெறிக்கு எதிரான பல்வேறு போராட்டங்கள், கண்டனங்கள் எழுந்து வருகிறது. அந்த வகையில் இந்திய நடிகர், நடிகைகள் பெரும்பாலானோர் தனது கண்டனத்தை சமூக தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தனது வாழ்கையில் சந்தித்த நிறவெறி சம்பவம் குறித்து நடிகை மாளவிகா மோகனன் கூறியுள்ளதாவது, ” எனக்கு 14 வயது இருக்கும், எனது நண்பர் கூறிய விஷயம் இது. ஏன் நண்பரின் அம்மா எப்பொதும் டீ குடிக்க அனுமதிப்பதில்லையாம், அப்படி ஒருநாள் டீ கேட்டதற்கு “நி டீ குடித்தால் அவளை (மாளவிகா) போல ஆகிவிடுவாய்’ என கூறினாராம். ஏன் நண்பர் மஹாராஷ்டிராவை சேர்ந்தவர்,நான் wheat-ish skin மலையாளி பெண். அப்போது வரை நான் இப்படி நிறத்தின் அடிப்படையிலான வேறுபாட்டை பார்த்ததே இல்லை. இது எனக்கு குழப்பத்தை ஏற்ப்படுத்தியது. ஏனென்றால் என்னுடைய தோல் நிறத்தை பற்றி ஒருவர் இப்படி மட்டமான முறையில் விமர்சித்ததில்லை.

Malavika Mohanan recalls her experience with racism
Malavika Mohanan Stills

மிக நீண்ட காலமாக இதுபோன்ற ஏற்ற தாழ்வுகள் இங்கேயும் நடைபெற்றுதான் வருகிறது. கருப்பாக இருப்பவரை பார்த்தால் காலா, நீக்ரோ எனவும், வெள்ளையாக இருப்பவர்கள் அழகு என்றும் கருப்பாக இருப்பவர்கள் அழகில்லை எங்கும் குறிப்பிடுகிறார்கள். மேலும், தென்னிந்தியாவிலிருந்து வருபவர்களை மதராஸி என்று ஏளனம் செய்கின்றனர், அனைத்து தென்னிந்தியர்களும் கருப்பாக தான் இருப்பார்கள் என அவர்கள் நினைகிறார்கள். வட கிழக்கு இந்தியாவில் இருந்து வரும் நபர்கள் அனைவருமே சிங்கி என்று அழைக்கின்றனர். கருப்பாக இருப்பது அழகில்லையா, உலகம் முழுவதும் இருக்கும் இனவெறி பற்றி பேசுகிறோம், அதே நேரத்தில் நமது அருகிலேயே நமது வீட்டில், நட்பு வட்டாரத்தில், சமுதாயத்தில் நடப்பதை பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும். அதை எதிர்த்து நமது பங்கிற்கு குரல் கொடுக்க வேண்டும். நம்மை சுற்றியும், ஒவ்வொரு நாளும் இது நடக்கிறது. நீங்கள் நல்ல, அன்பான நபராக இருந்தால் தான் உண்மையான அழகு, அது தோல் நிறத்தை பொறுத்து இல்லை” என கூறி நிறவெறி குறித்து தனது பதிவில் கூறியுள்ளார்.

Insta Feed:

 

View this post on Instagram

 

When I was 14 yrs old, one of my closest friends at that point told me that his mother never let him drink tea because she had this weird belief that drinking tea darkened ones’ skin complexion, and when he asked for tea once she told him(referring to me) “If you drink tea, you will become dark like her”. He was a fair maharashtrian boy and I was a wheat-ish skinned malayalee girl. The complexion dissimilarity we had had never even occurred to me up until that point. This left me perplexed because it was the first time somebody had made a comment like that with a mean undertone about my skin colour. So much casual racism and colourism exists in our own society. Calling a dark skinned person ‘kala’ is something we see on an everyday basis. The discriminatory behaviour against south-Indians and North-East Indians is also appalling. Dark skinned Indians are jokingly referred to as ‘madrasis’ because for some strange reason these ignorant people think all South Indians are only dark skinned. North-East Indians are almost exclusively only called ‘chinki’, all black people are casually referred to as ‘negros’ and fair people are equated as beautiful and dark skinned people are equated as ugly. While we speak about global racism, we must also become aware about what’s happening around us, in our homes, our friend circles and our society, and do our part in thwarting the obvious as well as the subtle racism and colourism that exists all around us, in our everyday lives. What makes you beautiful is being a good and kind person, and not the colour of your skin. ✊🏻✊🏼✊🏽✊🏾✊🏿

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…