மாறன் (2021) திரைப்பட விமர்சனம் | Maaran Movie Review and Rating

0
Maaran Movie Review and Rating
Maaran Movie Review and Rating

மாறன் (2021) திரைப்பட விமர்சனம் | Maaran Movie Review and Rating

படக்குழு:

நடிகர்கள்: தனுஷ், மாளவிகா மோகனன், ஸ்ம்ருதி வெங்கட், சமுத்திரக்கனி மற்றும் பலர்.

இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்

ஒளிப்பதிவு: விவேகானந்த் சந்தோஷம்

எடிட்டிங்: பிரசன்னா G.K

தயாரிப்பு: சத்ய ஜோதி ஃபிலிம்ஸ்

இயக்கம்: கார்த்திக் நரேன்

OTT: டிஸ்னி + ஹாட்ஸ்டார்.

Maaran Movie Review and RatingMaaran Movie Review and Rating
Maaran Movie Review and Rating

கதைச்சுருக்கம்:

நேர்மையான பத்திரிக்கையாளராக வரும் நாயகன் தனுஷ், அவரது தந்தையும் இதேபோல் நேர்மையாக இருந்ததால் கொள்ளப்பட, தாயும் தனது தங்கையின் பிரசவத்தின் போது இறக்க, தங்கையை வளர்க்கும் பொறுப்பு தனுஷிடம் வருகிறது. அதேபோல் அப்பாவின் நேர்மையையும் பின் தொடர்கிறார். இப்படிபோக, போலீசாக வரும் தனுஷின் நண்பர் அரசியல்வாதி சமுத்திரக்கனி செய்யும் ஒரு முறைகேட்டை கண்டுபிடிக்க சென்ற போலீஸ் ஒருவர் திடீரென காணாமல் போனதாக கூறி, உதவி கேட்கிறார். இதன்மூலம் சமுத்திரக்கனியுடன் மோதல் ஆரம்பமாகிறது. இறுதியாக இந்த தேடலின் போது தனுஷ் சந்தித்த தடைகள் என்ன? இறுதியாக சமுத்திரக்கனி செய்த குற்றத்தை கண்டுப்பிடித்தாரா? என்பதே கதைச்சுருக்கம்.

Maaran Movie Review and Rating
Maaran Movie Review and Rating

FC விமர்சனம்:

துருவங்கள் பதினாறு என்கிற ஒரே படத்தின் மூலம் நம்பிக்கைக்குரிய இயக்குனர் என எதிர்ப்பார்த்த கார்த்திக் நரேன் ஆனால் அந்த பெயரை
அடுத்தடுத்த படங்களில் கெடுத்துக் கொண்டார். எனினும் தனுஷ் என்கிற பெரிய நடிகருடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்க மாறன் படத்தை
இயக்கியுள்ளார்.சரி படம் எப்படி என பார்ப்போம்! நடிகர்கள் பொறுத்தவரை தனுஷ் வழக்கம்போல் எந்த குறையுமில்லாமல் அசால்ட்டாக நடித்துள்ளார். ஆனால் அவரது நடிப்பு திரைக்கு ஏற்ற பாத்திரமோ, வாய்ப்போ இப்படத்தில் சுத்தமாக இல்லை. ஏதோ ஒத்துக்கொண்டோம் முடித்து கொடுத்து விடுவோம் என நடித்துள்ளார். ஹீரோவுக்கே இப்படியென்றால் மற்றவர்களை நினைத்து பாருங்கள். மாளவிகா மோகனன் எதுக்கு என அனைவரின் மனதிலும் கண்டிப்பாக கேள்வி எழும். அந்தளவிற்கு இருக்கிறது அவரது பாத்திரம். தனுஷின் தங்கை ஸ்ம்ருதி வெங்கட்
மற்றும் அமீர் பாத்திரங்கள் மட்டுமே ஓரளவிற்கு(மட்டுமே) சொல்லும் படியாக அமைந்துள்ளது. அவர்களும் நிறைவாக நடித்துள்ளனர். மற்றபடி வில்லன் சமுத்திரக்கனி உள்பட அனைத்துமே வலு இல்லாமல் வந்து செல்கிறது.

ஜிவி பிரகாஷின் இசையில் பாடல்கள் & பின்னணி இசை ஆறுதல். உண்மையிலேயே தனுஷ் இந்த கதையை கேட்டுதான் படத்தை ஒப்புக் கொண்டாரா? இல்லை ஏதேனும் நெருக்கடியால் நடித்தாரா? என்பது தெரியவில்லை. அந்தளவிற்கு அரதப்பழசான கதை, துளியும் சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை நம்மை பெருமாளவு ஏமாற்றியுள்ளது. கதாப்பாத்திரங்கள் எதுவும் சரியாக எழுதப்படவில்லை, அதைவிட பல லாஜிக் மீறல்கள் வேறு உடன் சேர்ந்து நெருட வைக்கிறது.

Maaran Movie Review and Rating
Maaran Movie Review and Rating

உதாரணத்திற்கு, தனுஷ் பிரபலமான ஒரு பத்திரிக்கையாளர், டிவி, சோஷியல் மீடியா முதற்கொண்டு பல ஆயிரம் ஃபாலோவர்ஸ்கள் என வலம்வரும் ஒருவர், சமுத்திரக்கனியை உளவுப் பார்க்க ஹோட்டல் ரூம் பாய் போன்று உணவு எடுத்து செல்கிறார். கொஞ்சம் யோசித்து பாருங்கள் இவ்வளவு பெரிய பிரபலமான ஒருவரை அந்த வில்லனுக்கு அடையாளம் தெரியாதா? இந்தவொரு அடிப்படை அறிவுக்கூட இல்லாமல் கட்சிகளை எழுதியுள்ளார் கார்த்திக் நரேன். இதுபோன்று குறைகள் தான் அதிகமே தவிர, சொல்லும் படியான எதுவுமே பெரிதாக இல்லை. அது இந்த இப்படத்தின் டீசர், டிரைலரை பார்த்தபோதே லைட்டாக தோன்றியது. எனினும் தனுஷ் மேல் உள்ள நம்பிக்கைதான் படத்தை பார்க்க வைத்தது. இறுதியில் ஏமாற்றமே… இறுதியாக படம் எப்படி என்றால்? ரொம்ப ரொம்ப சுமார் ரகம்தான், பொறுமையுள்ளவர்கள் முயற்சி செய்து பாருங்கள்…

  Maaran Movie FC Rating: 1.5 /5  

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE 

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்