மாநாடு திரைப்பட விமர்சனம் | Maanaadu Movie Review

0
Maanaadu Movie Review
Maanaadu Movie Review

Maanaadu FDFS Fans Response:

 

படக்குழு:

நடிகர்கள்: சிலம்பரசன் TR, SJ சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், S.A. சந்திரசேகர், பிரேம்ஜி மற்றும் பலர்.

இசை: யுவன் ஷங்கர் ராஜா

ஒளிப்பதிவு: ரிச்சர்ட் M நாதன்

எடிட்டிங்: பிரவீன் KL

தயாரிப்பு: சுரேஷ் காமாட்சி

இயக்கம்: வெங்கட் பிரபு.

Maanaadu Movie Review
Maanaadu Movie Review

கதைச்சுருக்கம்:

உலக மொழிகளில் கலக்கும் டைம் லூப் என்கிற விஷயத்தை மையமாக வைத்து கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. கதைப்படி நண்பரின் திருமணத்திற்கு வரும் நாயகன் சிம்பு, முதலமைச்சரை கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறார். அதுவும் அந்த கொலை செய்யும் நாள் நாயகனுக்கு திரும்ப, திரும்ப வருகிறது. ஏன் இப்படி நடிக்கிறது? முதல்வரை நாயகன் கொலை செய்தாரா? காப்பாற்றினாரா? முடிவு என்ன என்பதே சுவாரஸ்யமான மீதிக் கதை.

Maanaadu Movie Review
Maanaadu Movie Review

FC விமர்சனம்:

மாநாடு, கடந்த மூன்று வருடங்களாக பலவித தடைகளை கடந்து இன்று(25.11.21) திரைக்கு வந்திருக்கிறது. இப்படி காக்கவைத்த ரசிகர்களை இப்படம் திருப்திப்படுத்தியதா? என்பதை பார்ப்போம். முதலில் நடிகர்கள், நாயகன் சிம்பு நீண்ட வருடங்களுக்கு பிறகு கதைகேற்ற, ஸ்மார்ட்டான, தனக்கே உரித்தான அருமையான நடிப்புடன் கலக்கியுள்ளார். அவருக்கு சற்றும் குறைவில்லாத நடிப்பில் போட்டிபோட்டுள்ளார் SJ சூர்யா. இவர்களை தவிர YG மகேந்திரன் இப்படியும் நடிப்பாரா? என வியக்க வைத்திருக்கிறார். நாயகி கல்யாணி ப்ரியதர்ஷனுக்கு பெரியளவு வாய்ப்பு இல்லை என்றாலும் வருகிற காட்சிகளில் ரசிகர்களின் மனதை கவர்கிறார். செம க்யூட்… இவர்களை தவிர மற்ற பாத்திரங்கள் நடிப்பில் ஏதும் குறை தெரியவில்லை.

Maanaadu Movie Review
Maanaadu Movie Review

இப்படத்தின் வெங்கட் பிரபுவின் கதைக்கு உயிர் கொடுத்து இன்று திரையில் ரசிக்கும்படி படத்தின் முதுகெலும்பாய் இருப்பவர்கள் எடிட்டர் பிரவீன் KL, ஒளிப்பதிவு ரிச்சர்ட் M நாதன் & இசை யுவன் ஷங்கர் ராஜா. இது போன்ற டைம் லூப் கதைகளுக்கு எடிட்டிங்தான் உயிர் கொடுக்கும் அந்த வேளையை மிக சிறப்பாக செய்துள்ளார் எடிட்டர் பிரவீன் KL (மாநாடு 100-வது படம் என்பது கூடுதல் சிறப்பு). பாடல்கள் ஹிட்டடித்தாலும் பின்னணி இசையில் மாஸ் காட்டியிருக்கிறார் யுவன். ஒரே காட்சிகளை திரும்ப திரும்ப அதேநேரம் அதில் எந்தவித குறையில்லாமல், நமக்கு சலிப்பு தட்டாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் ரிச்சர்ட் M நாதனின் ஒளிப்பதிவு தான்.

Maanaadu Movie Review
Maanaadu Movie Review

பொதுவாக வெங்கட் பிரபு படங்களில் கதை பெரியளவிற்கு இல்லாமல், காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துதான் படங்களை கொடுப்பார். ஆனால் இப்படத்தில் கதை, திரைக்கதையில் தனது அதிகபட்ச உழைப்பை கொடுத்திருக்கிறார் என்பது படத்தில் தெரிகிறது. ஏனெனில் திரும்ப, திரும்ப நிகழும் டைம் லூப் கதையை, கமெர்ஷியல் கலந்து எல்லாருக்கும் எளிதாக புரியும்படி கொடுத்திருக்கிறார். வாழ்த்துக்கள் வெங்கட் பிரபு. படத்தில் பெரிய குறையாக ஏதும் தெரியவில்லை, கதை துவங்கும் போது சற்று மெதுவாக நகர்ந்தாலும், போக போக விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லை (குறிப்பாக இரண்டாம் பாதி). நீண்ட போராட்டத்திற்கு பிறகு இப்படம் வெளி வந்தாலும், வெற்றியை ருசித்திருக்கிறது என்பதே நிதர்சனம். இறுதியாக குடும்பத்துடன் கண்டுகளிக்கக் கூடிய ஒரு நல்ல திரைப்படம் இந்த மாநாடு….

  Maanaadu FC Rating: 4 /5  

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

Maanaadu FDFS Fans Response:

 

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்