உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘மாமன்னன்’. ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் வடிவேலு, பகத், பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.


இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் காமெடியனாக கோலோச்சிய வடிவேலுவை டெரர் லுக்கில் காட்டியது இப்படத்தின் மேல் உள்ள எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் மெயின் வில்லனே வடிவேலு தானம், இதுவரை பார்த்திராத மோசமான அரசியல்வாதி கதாப்பாத்திரத்தில் வடிவேலு மிரட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படம் அடுத்த(ஜூன்) மாதம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…