‘மாமன்னன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா: உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’. ரெட் ஜெயன்ட் தயாரித்துள்ள இப்படத்தில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. இதில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராகவும், ஏ.ஆர்.ரஹ்மான் லைவ் கான்சர்ட் செய்யவுள்ளதும் கூடுதல் சுவாரஸ்யமாக அமைந்துள்ளது.


இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…