மாமனிதன் திரைப்பட விமர்சனம் | Maamanithan Movie Review & Rating

0
Maamanithan Movie Review & Rating
Maamanithan Movie Review & Rating

மாமனிதன் திரைப்பட விமர்சனம் | Maamanithan Movie Review & Rating

படக்குழு:

நடிகர்கள்: விஜய் சேதுபதி, காயத்ரி, K.P.A.C.லலிதா, அனிகா மற்றும் பலர்.

இசை: இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா

ஒளிப்பதிவு: M சுகுமார்

எடிட்டிங்: ஸ்ரீகர் பிரசாத்

தயாரிப்பு: YSR ப்ரொடக்ஷன்ஸ்

இயக்கம்: சீனு ராமசாமி.

Maamanithan Movie Review & Rating

கதைச்சுருக்கம்:

தேனி மாவட்டம் பண்ணைப்புரம் பகுதியில் ஆட்டோ டிரைவராக வரும் நாயகன் விஜய் சேதுபதி. மனைவி, இரண்டு பிள்ளைகள் என அழகான குடும்பத்துடன் வாழ்ந்துவரும் விஜய் சேதுபதிக்கு, தன்னுடைய ஆட்டோவில் வரும் பிள்ளைகள் பெரிய பள்ளிகளில் படிக்க, தான் பிள்ளைகள் சாதாரண பள்ளியில் படிக்கிறீர்களே! எப்போது தான் நம்முடைய வாழ்க்கைத்தரம் உயருமென ஏக்கம் வருகிறது. அதற்கான ஒரு சந்தர்ப்பம் வர, அந்த வேலையை செய்கிறார். இதனால் அவரது வாழ்கையில் ஏற்பட்ட பிரச்சனைகள் என்ன? நாயகனின் குடும்பம் என்ன ஆனது? என்பதே கதைச்சுருக்கம்.

Maamanithan Movie Review & Rating
Maamanithan Movie Review & Rating

FC விமர்சனம்:

விஜய் சேதுபதி – சீனு ராமசாமி இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள மாமனிதன் படம் எப்படி இருக்கு என்பதை விமர்சனத்திற்குள் சென்று பார்ப்போம். நடிகர்களை பொறுத்தவரை விஜய் சேதுபதி மிடில்கிளாஸ் வாழ்க்கை, ஆட்டோ டிரைவராக வாழ்ந்துள்ளார். யதார்த்த நடிப்பு அவ்வளவு அசால்ட்டாக வருவதால் எளிதாக ஸ்கோர் செய்துள்ளார். அவரது மனைவியாக வரும் காயத்ரி குடும்பத்தை பார்த்துக் கொள்ளும் பெண் பாத்திரத்தில் கட்சிதமாக பொருத்தியுள்ளார். எமோஷனல் காட்சிகளில் சிறந்த நடிப்பை கொடுத்துள்ளார். இவர்களை தவிர வரும் அனைத்து முக்கிய பாத்திரங்களுமே நீட்டாக, கொடுத்த பாத்திரத்தை நிறைவு செய்துள்ளனர்.

டெக்கினிக்கல் டீமை பொறுத்தவரை M சுகுமார் ஒளிப்பதிவில் கிராமிய வாழ்வை கண்ணிற்கு இனிமையாக காட்சிப் படுத்தியுள்ளார். அதேபோல் வாரணாசியை லைவ்வாக காட்சிப்படுத்திய விதமும் அருமை. இசையை பொறுத்தவரை இளையராஜா & யுவன் ஷங்கர் ராஜா இணைந்து கொடுத்திருந்தாலும் பெரிதளவு ஈர்க்கவில்லை. பொதுவாகவே சீனு ராமசாமி படங்கள் வாழ்வியலை சுற்றி யதார்த்தமாக இருக்கும், இப்படமும் அந்த வகையில் தான் வந்துள்ளது. படத்தின் குறையாக தெரிவது, உண்மைக்கு நெருக்கமாக காட்சிகள் நகர்வதால் மெதுவாகத்தான் நகர்கிறது, மேலும் கதைக்களம் கேரளாவிற்கு செல்லும்போது அங்கு வரும் பல காட்சிகள் நமக்கு சோர்வை தருகிறது, கதைக்கு பெரிதளவு தேவையும் இல்லை. ஆக பொறுமை தேவை. இறுதியாக படம் எப்படி என்றால் குடும்பத் தலைவராக தனது பொருளாதாரத்தை மேம்படுத்த நினைக்கும் போது இப்படம் உங்களுக்கு இப்படம் உங்களுக்குள் சிறிய பாதிப்பை ஏற்படுத்தும். மற்றபடி ஓகே ரகம்தான்…

Maamanithan Movie Film Crazy Media Rating: 3 /5

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்