செய்தி வாசிப்பாளராக இருந்து, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் சினிமா கதாநாயகியாக வளர்ந்திருப்பவர் லாஸ்லியா.


சினிமாவில் தனது முதல் படமாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் மற்றும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிக்கும் ‘பிரண்ட்ஷிப்’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்து, நடிகர் ஆரி நடிக்கும் படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார். இந்நிலையில், லாஸ்லியா நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி யுள்ளது. அறிமுக இயக்குனர் KM ராஜா இயக்கவுள்ள கிரைம் திரில்லர் படத்தில் கதையின் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார் லாஸ்லியா, கே.பூரனேஷ் என்பவர் நாயகனாக நடிக்கவுள்ளார். அக்ஸஸ் பிலிம் பேக்டரி இப்படத்தை தயாரிக்கவுள்ளது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. மற்ற நடிகர்கள் பற்றிய விவரமும் வெளியாகுமென படக்குழு தரப்பில் கூறப்பட்டது.
நடிகை ரைசா வில்சனின் ஓணம் சிறப்பு படங்கள்!
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...