செய்தி வாசிப்பாளராக இருந்து பிக்பாஸ் புகழ் மூலம் தற்போது கதாநாயகியாக மாறியிருப்பவர் லாஸ்லியா.


பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழக அளவில் பாப்புலராகி ஹர்பஜன்சிங் நடிக்கும் பிரண்ட்ஷிப், ஆரியுடன் புதிய படம் என சில படங்களில் நடித்து வருகிறார். இன்றளவும் அவருக்கான ரசிகர் ஆர்மி படு சுறுசுறுப்பாக தான் இயங்கி வருகிறது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா லேட்டஸ்டாக பதிவிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 2016ம் ஆண்டில் பாவடை, தாவணியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக இலங்கையில் தனது பெற்றோருடன் வசித்து வரும் லாஸ்லியா, சொந்த ஊரில் தனது மகிழ்ச்சியை அவ்வபோது புகைப்படங்களாக வெளியிட்டு வருகிறார்.




பொன்மகள் வந்தாள் திரைப்பட விமர்சனம்
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…