அடுத்தடுத்து ரீமேக்காகும் லோகேஷ் கனகராஜ் படங்கள்!

0
Lokesh Kanagaraj's Two Movies Remake in Bollywood

Lokesh Kanagaraj’s Two Movies Remake in Bollywood

 

தமிழ் சினிமாவின், தற்போதைய டிரண்டிங் இயக்குனராக லோகேஷ் கனகராஜ் இருந்து வருகிறார். இத்தனைக்கும், இவர் இயக்கத்தில் இதுவரை மாநகரம், கைதி ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகியுள்ளது. இருப்பினும் முன்னணி இயக்குனர்கள் வரிசையில் தற்போது இணைந்துள்ளார் என்பது பாராட்டுக்குறியது.  இப்படங்களைத் தொடர்ந்து, தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கியுள்ள மாஸ்டர் ரசிகர்கள் மட்டுமின்றி, திரையுலகினர் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் வெளியீடு தேதி குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Lokesh Kanagaraj's Two Movies Remake in Bollywood
Lokesh Kanagaraj’s Two Movies Remake in Bollywood

இதைத்தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க புதிய படமொன்றை இயக்கவுள்ளார் லோகேஷ். கமல்ஹாசன்232 என தற்காலிக பெயரிலிருக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதெல்லாம் ஒருபுறம் இருக்க, லோகேஷ் இயக்கிய மாநகரம், மற்றும் கைதி ஆகிய இரண்டு படங்களும், ஹிந்தியில் ரீமேக்காகவுள்ளது. இதில், கைதி படத்தில் அஜய் தேவ்கன் நடிக்கவுள்ளார், என்கிற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியது. இந்நிலையில், லோகேஷ் கனகராஜின் முதல் படமான மாநகரம் படத்தை, பிரபல முன்னணி ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான சந்தோஷ் சிவன் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய்யின் புலி, மற்றும் விக்ரம் நடித்த சாமி டு படங்களை தயாரித்த, ஷிபு தமீன்ஸ், மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்கை தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

⮕ Amala Paul Latest Stunning Stills

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...