‘லைகர்’ திரைப்பட விமர்சனம் | Liger Movie Review and Rating

0
Liger Movie Review and Rating
Liger Movie Review and Rating

‘லைகர்’ திரைப்பட விமர்சனம் | Liger Movie Review and Rating

படக்குழு:

நடிகர்கள்: விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், மைக் டைசன் மற்றும் பலர்.

இசை: சுனில் காஷ்யப்

ஒளிப்பதிவு: விஷ்ணு ஷர்மா

எடிட்டிங்: ஜுனைத் சித்திக்

தயாரிப்பு: Dharma Productions & Puri Connects

இயக்கம்: பூரி ஜெகன்நாத்.

Liger Movie Review and Rating
Liger Movie Review and Rating

கதைச்சுருக்கம்:

தனது அப்பாவை போலவே MMA சண்டை வீரராக வரவேண்டுமென துடிக்கும் நாயகன் விஜய் தேவரகொண்டா, அவருக்கு பக்கபலமாக தாய் ரம்யா கிருஷ்ணன். இடையில் வரும் வழக்கமான மொக்க காதல், இறுதியாக ஹீரோ நினைத்தது போல பைட்டர்ஆனாரா? இல்லையா? என்பதே கதைச்சுருக்கம்.

FC விமர்சனம்:

விஜய் தேவரகொண்டா நடிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் மிகப்பெரிய பில்டப்களுக்கு இடையே வெளியான திரைப்படம் லைகர். படம் எப்படி இருக்கு? வாருங்கள் விமர்சனத்திற்குள் சென்று பார்ப்போம். நடிகர்களை பொறுத்தவரை நாயகன் விஜய் தேவரகொண்டா உடல் அளவில் கடும் உழைப்பை கொடுத்திருந்தாலும், நடிப்பை பொறுத்தவரை ஓவர் ஆக்டிங் தாங்க முடியலை. அதிலும் திக்கு வாயாக நடிக்கிறேன்னு கொலையா கொன்னுருக்காரு மனுஷன். ரம்யா கிருஷ்ணன் வருகிற காட்சிகள் அனைத்திலும் சொர்ணாக்கா போன்று கத்திகிட்டே ஹீரோவுக்கு பில்டப் கொடுத்து அவர் பங்குக்கு நம்மை சாகடித்துள்ளார். நாயகி அனன்யா பாண்டே, கிளாமர் உடையில் லூசு தனமா படமுழுக்க வந்து செல்கிறார், உண்மையில் இதுபோன்ற ஹீரோயின்கள் பாவம்தான்.

Liger Movie Review and Rating
Liger Movie Review and Rating

இப்படத்தின் ஒரே பலம் விஷ்ணு ஷர்மாவின் ஒளிப்பதிவு தான், உயர்தரம், நல்ல லைட்டிங் என மொக்கை காட்சிகளுக்கு அழகு சேர்க்க முயன்றுள்ளார். மற்றபடி படத்தில் பெரிதாக எதுவும் பாசிட்டிவாக சொல்வதிற்கில்லை. இப்படத்தின் கதையை படித்தவுடனே உங்களுக்கே தெரிந்திருக்கும் எவ்வளவு அறுத பழைய கதை என்று, திரைக்கதை அதற்கும் மேல் இருக்கிறது. ஒரு காட்சியில் கூட நம்பகத்தன்மை இல்லை, மனதிற்கு ஒட்டவே இல்லை. எந்தவொரு கதாப்பத்திரமுமே சரியாகவோ, அலுதமாகவோ இல்லை, எரிச்சலூட்டும் விதத்தில் தான் அமைந்துள்ளது, குறிப்பாக ஹீரோயின் தாங்க முடியலை. மைக் டைசனுக்கு பொருளாதார பற்றாக்குறை போல, என்ன பெரிய முக்கியத்துவம் இருக்குனு இதுல நடிக்க ஒதுக்கிட்டாருனு தெரியல. இறுதியாக படம் எப்படி என்றால்? உங்கள் பொறுமையை சோதித்து பார்க்க ஆசைப்படுபவர்கள் கனத்த இதயத்தோடு சென்று முயற்சி செய்து பாருங்கள். படு மொக்கப்பா…

Liger Movie Film Crazy Media Rating: 1 /5

 

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE