லிப்ட் திரைப்பட விமர்சனம் | Lift Movie Review

0

படக்குழு:

நடிகர்கள்: கவின், அம்ரிதா மற்றும் பலர்.

இசை: பிரிட்டோ மைக்கேல்

ஒளிப்பதிவு: S யுவா

எடிட்டிங்: G மதன்

தயாரிப்பு: ஈகா என்டர்டைன்மென்ட்

இயக்கம்: வினித் வரபிரசாத்.

OTT: டிஸ்னி + ஹாட்ஸ்டார்.

Lift Movie Review and Rating
Lift Movie Review and Rating

கதைச்சுருக்கம்:

கதைப்படி ஐடி கம்பெனியில் வேலைப்பார்க்கும் ஹீரோ கவின், பெங்களூரிலிருந்து சென்னைக்கு டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு வருகிறார். சென்னையில் முதல்நாள் கொஞ்சம் வேலைகள் அதிகமிருக்க ஓவர் டைமில் அவர் மட்டும் அந்த அலுவலகத்தில் வேலைப் பார்க்க சூடுப்பிடிக்கிறது கதை. அந்த ஓர் இரவு கவின் படும் பாடு என்னென்ன? யார் இதை செய்கிறார்கள்? இறுதியாக ஹீரோ தப்பித்தாரா? என்கிற சுவாரஸ்யமே மீதிக்கதை.

Lift Movie Review and Rating
Lift Movie Review and Rating

Instant Cinema Breaking News Follow on Twitter @filmcrazymedia

FC விமர்சனம்:

அறிமுக இயக்குனர் வினித் வரபிரசாத் இயக்கத்தில் நேற்று நள்ளிரவு டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள திரைப்படம் லிப்ட். ஹாரர் என்கிற களத்தில் காமெடி, கவர்ச்சியை நிரப்பி கல்லா கட்டும் இன்றைய சினிமாவில் நிஜமாகவே திரில்லர் அம்சத்துடன் ஒரு படத்தை நேர்மையாக கொடுத்துள்ளார் இயக்குனர், அதற்கே பெரிய பாராட்டுக்கள். நடிகர்கள் பொறுத்தவரை கவின் அருமையாக இந்த கதைக்கு பொருந்தியுள்ளார். நடிப்பிலும் எந்தவித குறையும் தெரியவில்லை. அதேபோல் நாயகி அம்ரிதாவும் தனது பாத்திரத்தை நிறைவாக செய்துள்ளார்.

படத்தில் நிறைய பாராட்டுக்குரிய விஷயங்கள் உள்ளது, முதலில் ஒளிப்பதிவு ஒரே அலுவலகம், ஒரே பில்டிங், லிப்ட் என இந்த இடத்திற்குள்ளேயே தரமான காட்சியமைப்புகளை படமாக்கியுள்ளார். அதேபோல் படத்திற்கு பெரிய பிளஸ் சவுண்ட் எஃபெக்ட்ஸ் படத்தை அடுத்த லெவலுக்கு உயர்த்தி நம்மை படத்துடன் இணைய உதவியுள்ளது இப்படத்தின் சவுண்ட் எஃபெக்ட்ஸ். இசையை பொறுத்தவரை திரில்லர் படத்திற்கு எப்படி இசை இருக்குமோ அந்தளவிற்கு பொருந்தியுள்ளது. எடிட்டிங் இடையில் சில லேக் அடிக்கும் காட்சிகளை குறைத்திருக்கலாம்.

Lift Movie Review and Rating
Lift Movie Review and Rating

பொதுவாக பேய் படமென்றால் அகோரமாக மேக்கப் இல்லையென்றால் வெள்ளை புடவை கட்டிக்கொண்டு அங்கும், இங்கும் திரிவது போன்ற காட்சிகள் இருக்கும். ஆனால், இப்படத்தை பொறுத்தவரை அதுபோன்ற காட்சிகள் ஓரிரண்டு இடங்களில் இருந்தாலும், வெறும் ஒளிப்பதிவு, சவுண்ட் மூலம் படமுழுக்க நம்மை திகிலுடனும், சுவாரஸ்யம் குறையாமலும் கொண்டு சென்றுள்ளது பாராட்டுக்குரியது. படத்தின் குறையாக தெரிவது, நன்றாக போய்க் கொண்டிருக்கும் கதையில் இடையில் மீண்டும் அதே இடத்திற்குள் சுற்றிக்கொண்டிருக்கும் காட்சிகள் சில போர் அடிக்க செய்கிறது. படத்தின் முதல் பாதி, அதேபோல் கிளைமாக்ஸ் இதற்கிடையே வரும் காட்சிகளை குறைத்து படத்தின் சுவாரஸ்யத்தை மேலும் அதிகமாக்கியிருக்கலாம். இதைத்தவிர பெரிய குறை ஏதும் தெரியவில்லை. இறுதியாக உலக படங்கள் பார்க்கும் ரசிகர்களுக்கு இந்த கதையம்சம் யூகிக்கும் அளவிற்கு இருந்தாலும், ஒரு நல்ல திரில்லர் படம் பாக்கணுமா? லிப்ட் கண்டிப்பாக அந்த அனுபவத்தை கொடுக்கும்.

 Lift Movie FC Rating: 3.5 /5 

 

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்