‘லியோ’ இரண்டாவது சிங்கிள் எப்போது? வெளியான தகவல் இதோ:
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. லலித் குமார் தயாரித்துள்ள இப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
அனிருத் இசையில் இப்படத்திலிருந்து வெளியான ‘நா ரெடி’ பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 120மில்லியன் பார்வைகளை கடந்து சென்றுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாடல் அனிருத்திடம் கேட்டபோது, “லியோ படத்தின் அடுத்த சிங்கிள் ரிலீஸ் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அடுத்த வாரம் இதுக்குறித்த அப்டேட்டுகள் வரும்’ என கூறியுள்ளார்.
இரண்டு பாடல்கள் மட்டுமே இப்படத்தில் இருப்பதாகவும், மீதி அனைத்தும் தீம் மியூசிக்காக சம்பவம் செய்துள்ளாராம் அனிருத்.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண