டுவிட்டரில் ‘லியோ’ படைத்த புதிய சாதனை! என்னனு பாருங்க:
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ள இப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மடோன்னா செபாஸ்டியன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் இப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இந்நிலையில் தற்போது டுவிட்டர்(X) தளத்தில் லியோ ஹாஷ்டேக்கை பயன்படுத்தி இதுவரை 25 மில்லியன் போஸ்ட்கள் பதிவிடப்பட்டுள்ளது. ரசிகர்களின் ஏகோபித்த எதிர்ப்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 30ஆம் தேதி சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளதாக படக்குழு தரப்பில் கூறப்படுகிறது.


இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண