சூர்யாவின் சூரரைப் போற்று படத்திற்கு மேலும் ஒரு சிக்கல்!

0
சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று பட பாடலுக்கு எதிரான புகார்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Soorarai Pottru Movie Release on Amazon Prime
Soorarai Pottru Movie Release on Amazon Prime
சுதா கொங்காரா இயக்கத்தில், சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரைப்போற்று. இப்படத்தில் இடம்பெற்றுள்ள “மண் உருண்ட மேல” என்ற பாடலில், சாதி தொடர்பான வரிகள் இருப்பதாகவும், இதுபோன்ற பாடல் பிரச்சனையை ஏற்படுத்தும் என்பதாலும் 2022 வரை இப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி, தர்மபுரியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகாரை சட்டப்படி பரிசீலித்து நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் சூரரைப் போற்று மேலும் ஒரு சிக்கல் உருவாகியுள்ளது. இப்படம் அக்டோபர் 30 -ஆம் தேதி அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

⮕ அனுஷ்காவின் ‘நிசப்தம்’ திரைப்படம் OTT-ல் வெளியீடு?

ஆர்டர் செய்தது ஆப்பிள் வாட்ச், ஆனால் வந்தது? இசையமைப்பாளருக்கு நிகழ்ந்த ஏமாற்றம்

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…