தமிழ் சினிமாவில் நடன இயக்குனராகவும், இயக்குனராகவும், நடிகராகவும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள லாரன்ஸ் மாஸ்டர், பாலிவுட்டில் இயக்கியிருக்கும் முதல் படம் ‘லக்ஷ்மி பாம்’ நேரடியாக OTT தளத்தில் வெளியாகவுள்ளது.


இதில் ஹைலைட் என்னவென்றால் இப்படத்தின் ஹீரோ பாலிவுட் முன்னணி நடிகர் அக்ஷய் குமார். கொரோனா ஊரடங்கால் சினிமா துறை பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ள இந்நிலையில் பல படங்கள் OTT தளம் நோக்கி படையெடுக்க துவங்கியுள்ளன. தமிழில் பொன்மகள் வந்தாள், பெண்குயின் ஆகிய படங்கள் நேரடியாக வெளியாகியுள்ள நிலையில், வரலக்ஷ்மி நடிப்பில் டேனி, யோகி பாபு நடிப்பில் காக்டெயில், லாக்கப் உள்ளிட்ட தமிழ் படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது.


இந்நிலையில் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து OTT தளத்தில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் லாரன்ஸ் இயக்கத்தில் அக்ஷய் குமார், கைரா அத்வானி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லக்ஷ்மி பாம்’. இது தமிழில் லாரன்ஸ் நடித்த ’காஞ்சனா’ திரைப்படத்தின் இந்தி ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் OTT தளத்தில் நேரடியகவுள்ளது.


———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்
👉 விஷால் நடிப்பில் ‘சக்ரா’ திரைப்படத்தின் டிரைலர் வீடியோ
👉 ‘இது மரணம் இல்லை கொலை’ திரைத்துறை வட்டாரத்தில் குவியும் கண்டனங்கள்
👉 சாய் பல்லவி நடித்தால் நான் விலகி கொள்கிறேன் ராஷ்மிகா!
👉 புல்லட் ஓட்ட கற்றுக்கொள்ளும் போது தவறி விழுந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்!
👉 உடல் எடை குறைத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ராசி மந்த்ரா!
👉 சமந்தா முத்தமிட்ட நபருக்கு கொரோனா பாதிப்பு? உண்மை நிலவரம்
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...