டுவிட்டரில் மோதிக்கொண்ட லக்ஷ்மி ராமகிருஷ்ணன் & வனிதா விஜய குமார்!

0
Lakshmy Ramakrishnan Tweet about Vanitha Vijayakumar Marriage

வனிதா விஜயகுமார் – பீட்டர் பால் திருமணம் நேற்று முன் தினம் நடந்து முடிந்தது. இந்த திருமணம் சட்டப்படி செல்லாது என பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் சென்னை வட பழனி காவல் நிலையத்தில் புகார் அளிக்க துவங்கியது பிரச்சனை.

Lakshmy Ramakrishnan Tweet about Vanitha Vijayakumar Marriage

இணையதளங்களிலும், ஊடகங்களிலுமே இது பெரிய செய்தியாக உருவெடுக்க, இது குறித்து நடிகையும், இயக்குநருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ட்விட்டரில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, “தற்போது தான் செய்தியை பார்த்தேன். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி, இரண்டு குழந்தைகள் இருக்கிறது, இன்னும் விவாகரத்து ஆகவில்லை. படித்த ஒருவர் எப்படி இப்படி ஒரு தவறை செய்ய முடியும்?!! அதிர்ச்சியாக இருக்கிறது.

வனிதா, பீட்டர் பாலின் திருமணம் முடியும் வரை ஏன் முதல் மனைவி காத்திருந்தார். அவர் ஏன் திருமணத்தை நிறுத்தவில்லை. வனிதா நிறைய கஷ்டங்களை அனுபவித்துவிட்டார். அது குறித்து அவரே தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் இந்த திருமணம் மூலம் அவர் செட்டில் ஆவார் என்று நாம் நம்பியிருந்தேன். அவர் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று தான் அனைவரும் விரும்பினார்கள்” பதிவிட்டிருந்தார்.

Lakshmy Ramakrishnan Tweet about Vanitha Vijayakumar Marriage
Lakshmy Ramakrishnan

இதைக் கண்ட வனிதா ” உங்களின் அக்கறைக்கு நன்றி. நான் நன்றாக படித்தவள், சட்டம் பற்றிய அறிவும் எனக்கு உண்டு. என் வாழ்க்கையை என்னால் பார்த்துக் கொள்ள முடியும். யாருடைய ஆதரவும் இன்றி என் முடிவுகளை நீங்கள் அங்கீகரிக்கவோ, ஆதரிக்கவோ தேவையில்லை. இது பொது பிரச்சனை இல்லை என்பதால் தள்ளி இருக்கவும். இது உங்களின் ஷோ இல்லை” காட்டமாக பதில் பதிவிட்டுள்ளார்.

Lakshmy Ramakrishnan Tweet about Vanitha Vijayakumar Marriage
Vanitha Vijayakumar

விடாத லக்ஷ்மி ராமகிருஷ்ணன் “கண்டிப்பாக. என் அக்கறை உங்களை பற்றி அல்ல அவரின் முதல் மனைவி மற்றும் குழந்தைகள் பற்றி தான். நீங்கள் தைரியமானவர். இதை கையாள்வீர்கள், ஆனால் அந்த பெண்?. அவர் பொதுமக்களிடம் ஆதரவு கேட்கிறார். சட்டப்படி விவாகரத்து பெறாமல் மறுமணம் செய்ததை பற்றி தான் நான் பேசினேன்” மீண்டும் கமென்ட் செய்தார்.

மீண்டும் வனிதா “இரண்டு பேர் ஏன் பிரிகிறார்கள் அல்லது விவாகரத்து பெறுகிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?. இதற்கும் உங்களுக்கும் சம்பந்தமே இல்லை. அவர்களின் பர்சனல் விஷயத்தில் நானே தலையிடவில்லை. அதனால் உங்கள் வேலையை மட்டும் பார்க்கவும். மேலும் உங்களுக்கு சரியாகக் கூட தெரியாத நபர் மீதான அக்கறையை உங்களுடன் வைத்துக் கொள்ளவும். வெளிப்படையாக பேசினால் அவர்கள் தவறானவர்கள் அல்ல என்று அர்த்தம் இல்லை. சட்டம் பார்த்துக் கொள்ளட்டும். நீங்களும், நானும் வெறும் பார்வையாளர்களே. கமெண்ட் செய்ய எந்த உரிமையும் இல்லை” என கூற இவர்கள் இருவருக்குள்ளும் பிரச்சனை வெடித்தது. 

Lakshmy Ramakrishnan Tweet about Vanitha Vijayakumar Marriage

பின் ஒருக்கட்டதில் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் “வனிதா, பீட்டர் பால் திருமணம் பற்றி விவாதிப்பதை நிறுத்திக் கொள்வோமா. விவாகரத்து பெறாமல் மறுமணம் நடந்ததால் என் கருத்தை ட்வீட் செய்தேன். நான் முக்கியமான விஷயங்களான பலாத்காரம், தந்தை, மகன் மரணம் பற்றி பேசும்போது இந்த அளவுக்கு ரெஸ்பான்ஸ் இல்லையே” என்று கூறி முடித்துள்ளார்.

அதற்கும் வனிதா “இந்த உலகம் மிக சிறியது லக்ஷ்மி ராமகிருஷ்ணன், உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்” என பதில் கூறி பிரச்சனை முடிவிற்கு வந்தது. 

 

———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்  

 

👉 விஷால் நடிப்பில் ‘சக்ரா’ திரைப்படத்தின் டிரைலர் வீடியோ

👉 ‘இது மரணம் இல்லை கொலை’ திரைத்துறை வட்டாரத்தில் குவியும் கண்டனங்கள்

👉 சாய் பல்லவி நடித்தால் நான் விலகி கொள்கிறேன் ராஷ்மிகா!

👉 புல்லட் ஓட்ட கற்றுக்கொள்ளும் போது தவறி விழுந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்!

👉 உடல் எடை குறைத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ராசி மந்த்ரா!

👉 சமந்தா முத்தமிட்ட நபருக்கு கொரோனா பாதிப்பு? உண்மை நிலவரம்

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…