‘ஷோவிற்காக பாத்திரங்களையும், டாய்லெட்டையும் கழுவ அவசியலில்லை’ பிக்பாஸ் குறித்து லக்ஷ்மி மேனன்

0
Lakshmi Menon refuses participating in Bigboss

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 விரைவில் ஆரம்பமாகவுள்ளது. இதனால் இதில் கலந்துகொள்ள போகும் போட்டியாளர்கள் யார்? என்ற செய்திகள், வதந்திகள் வந்துகொண்டே இருக்கிறது.

Lakshmi Menon refuses participating in Bigboss
Lakshmi Menon refuses participating in Bigboss

அந்த வகையில் நடிகை லக்ஷ்மி மேனன் இந்த சீசனில் கலந்துகொள்ள போவதாக பெருவாரியான தகவல்கள் வெளிவர அதுகுறித்து முதன்முறையாக வாய் திறந்துள்ளார் லக்ஷ்மி மேனன். அவர் கூறியுள்ளதாவது, “வேலையில்லாமல் இருப்பவர்களின் பொழுதுபோக்குக்காக, ஒரு ஷோவில் கலந்துகொண்டு பாத்திரங்களையும், டாய்லெட்டையும் கழுவ எனக்கு அவசியமில்லை. நான் எனது வீட்டில் பாத்திரங்களைக் கழுவலாம். ஆனால் ஒரு ஷோவுக்காக பாத்திரங்களைக் கழுவுவதும், தனிப்பட்ட வாழ்க்கையை போட்டுக்காட்டுவதும், சண்டை போடுவதும் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. நான் பிக்பாஸ் ஷோவில் கலந்துகொள்வதாக எழும் வதந்தி பொய்யானது” என கூறியுள்ளார். ஒரு நேரத்தில் தொடர் வெற்றிகளை பெற்று ராசியான நடிகை என தமிழ் சினிமாவில் பெயர் எடுத்த லக்ஷ்மி மேனன் தற்போது படங்கள் ஏதுமின்றி மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க முயற்சி செய்து வருகிறார்.

⮕ இணையத்தில் வைரலாகும் நடிகை சமந்தா வொர்க்அவுட் படங்கள்

Lakshmi Menon refuses participating in Bigboss
Lakshmi Menon refuses participating in Bigboss

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…