90 -களில் ரசிகர்களின் கனவு கன்னியாக மட்டுமில்லாமல் ஒருபடி மேலே சென்று கோவில் கட்டுமளவிற்கு ரசிகர் பட்டாளங்களை வைத்திருந்தவர் நடிகை குஷ்பூ.


ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, சத்யராஜ் என பல முன்ன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். மேலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாகவும் திகழ்ந்தார். திருமண வாழ்க்கைக்கு பிறகு சினிமா வாழ்கையை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கொண்டு, அரசியல் பக்கம் நகர்ந்தார். இந்நிலையில் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் குஷ்பூ அடிக்கடி சினிமா, அரசியல் சார்ந்த கருத்துக்கள், பொதுநல கருத்துக்கள் என பதிவுகளை போஸ்ட் செய்வார். அந்த வகையில் தான் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை சமீபத்தில் சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார், அந்த படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நீண்ட வருடங்களுக்கு பிறகு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் ‘அண்ணாத்தே’ படத்தில் குஷ்பூ நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.








சினேகா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோ
கொட்டும் மழையில் அட்டகாச போட்டோஷூட் நடத்திய தர்ஷா குப்தா!
டாக்டர் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நடிகை ஷிவானி!
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...