அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு, சமீபகாலமாக பாரதிய ஜனதா கட்சி ஆதராவாக, சாதகமான கருத்துக்களை பேசி வந்தார். இதையடுத்து கடந்த சில தினங்களாக நடிகை குஷ்பு, பாரதிய ஜனதா கட்சியில் இணையவுள்ளதாக வதந்தி பரவியது. இதற்கு, இரண்டு ரூபாய் வாங்கிக் கொண்டு இதுபோன்ற வதந்திகளை பரப்புகிறார்கள் என குஷ்பூ கூறியிருந்தார்.


ஆனால், நேற்று இரவு 9.30 மணிக்கு திடீரென அவசரம் அவசரமாக டெல்லி கிளம்பியுள்ளார், மேலும் அப்போது குஷ்புவிடம் நிருபர்கள், நீங்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வருகிறதே உண்மையா? என்று கேட்டனர். அதற்கு அவர், “கருத்து சொல்ல விரும்பவில்லை” (நோ காமண்ட்ஸ்) என பதில் அளித்தார். மேலும் அவரிடம், நீங்கள் காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து நீடிக்கிறீர்களா? என்று கேட்டதற்கும் அவர் பதில் அளிக்கவில்லை. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பொறுப்பிலிருந்து குஷ்பு நீக்கப்பட்டுள்ளார். குஷ்புவின் பதவி பறிக்கப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் தொடர்பு பிரிவு பொறுப்பாளர் பிரணவ் ஜா அறிவித்துள்ளார்.
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...