8 தோட்டாக்கள் என்கிற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் இளம் இயக்குனர் ஸ்ரீ கணேஷ். இப்படத்தை தொடர்ந்து அதர்வா நடிப்பில் ‘குருதி ஆட்டம்’ என்கிற படத்தை இயக்கியுள்ளார்.


ஒரு விபத்திற்கு பிறகு, ஒரு குழந்தையை காப்பற்ற ஹீரோ படும் போராட்டமே குருதி ஆட்டம் படத்தின் மையக்கரு. இப்படத்தின் தலைபிற்கே ஏகப்பட்ட பிரச்சனைகள் ஆரம்பத்தில் ஏற்பட்டது, எனினும் அந்த தலைப்பே இறுதியானது. இப்படத்தின் நாயகனாக அதர்வாவும், நாயகியாக பிரியா பவானி ஷங்கரும் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டது. இரு மாதங்களுக்கு பிறகு, சமீபத்தில் போஸ்ட் புரொடக்ஷன் பணிக்கு அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியது. முதலாவதாக பிரியா பவானி சங்கர் தனது டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார். மேலும், ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகுமென படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது.


செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...