‘குருப்’ திரைப்பட விமர்சனம் | Kurup Movie Review

0

படக்குழு:

நடிகர்கள்: துல்கர் சல்மான், இந்திரஜித் சுகுமாரன், ஷைன் டாம் சாக்கோ, சன்னி வேன், சோபிதா துலிபலா மற்றும் பலர்.

இசை: சுஷின் ஷியான்

ஒளிப்பதிவு: நிமிஷ் ரவி

எடிட்டிங்: விவேக் ஹர்ஷன்

தயாரிப்பு: M ஸ்டார் என்டர்டெய்ன்மென்ட்

இயக்கம்: ஸ்ரீநாத் ராஜேந்திரன்.

Kurup Movie Review & Rating
Kurup Movie Review & Rating

கதைச்சுருக்கம்:

கேரளாவில் சுமார் 37 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மிகப்பெரிய குற்றச் சம்பவத்தை அடிபடையாகக் கொண்டது உருவாகியுள்ளது இத்திரைப்படம். 36 ஆண்டுகள் கேரள போலீஸ் கண்ணில் மண்ணை தூவி இன்றளவும் சிக்காமல் இருக்கும் சுகுமார குரூப் என்கிற நபரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் நாயகன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து ஒரு சம்பவத்தை அரங்கேற்றுகின்றனர், ஆனால் அதில் நண்பர்கள் அனைவரையும் போலீஸ் பிடிக்க, இதற்கெல்லாம் மாஸ்டர் பிளான் போட்ட நாயகன் தப்பிக்கிறான். இறுதியாக அவர்கள் செய்த சம்பவம் என்ன? கடைசியாக என்ன ஆனது? என்பதே மீதிக் கதை.

Kurup Movie Review & Rating
Kurup Movie Review & Rating

FC விமர்சனம்:

குருப், இப்படம் உண்மை சம்பவம் அதிலும் கிரைம் திரில்லர் கதை என்பதால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிறையவே இருந்தது. இந்த எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ததா? என்பதை பார்ப்போம். முதலில் இப்படத்தில் நிறைய பாத்திரங்கள் இருந்தாலும், முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள நாயன் துல்கர் சல்மான், இந்திரஜித் சுகுமாரன், ஷைன் டாம் சாக்கோ இவர்கள் மூவரது நடிப்பும் நன்றாக இருந்தது. நாயகி சோபிதா துலிபலாவிற்கு பெரியளவு ரோல் இல்லையென்றாலும் கொடுத்ததை நிறைவாக செய்துள்ளார்.

Kurup Movie Review & Rating
Kurup Movie Review & Rating

இப்படத்தின் மிகப்பெரிய பலமாக ஒளிப்பதிவு, எடிட்டிங்கும், பின்னணி இசையும் அமைந்துள்ளது, ஒரு கிரைம் திரில்லரை எந்தளவு சுவாரஸ்யமாக வேண்டுமோ, அதை மிக நேர்த்தியாக செய்துள்ளார்கள். பாடல்களை பொறுத்தவரை பெரிதாக ஈர்ப்பு இல்லை. படத்தின் குறையாக தெரிவது ஒரு நல்ல கதை, இதை சரியாக நேராக கதையை நோக்கி நகராமல், முதல் அரைமணி நேரம் நம் பொறுமையை சோதித்து தான் பார்க்கிறது. அந்தளவிற்கு படத்திற்கு அந்த காட்சிகள் ரொம்ப முக்கியமா என்றால் இல்லை, இருந்தாலும் எடுத்து சோதித்துள்ளர்கள். முன்பு பாராட்டை பெற்ற எடிட்டர் இதை கொஞ்சம் கவனித்திருக்கலாம். படத்தின் உயிரோட்டமே இரண்டாம் பாதி தான்… இறுதியாக முதல் அரை மணிநேரத்தை கழித்தால், கிரைம் திரில்லர், சன்ஸ்பென்ஸ் திரில்லர் ரசிகர்களை திருப்திப்படுத்தும் படமாக இந்த ‘குருப்’ அமைந்துள்ளது எனலாம்.

  Kurup Movie FC Media Rating – 3.75 /5  

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்