‘இது மரணம் இல்லை கொலை’ திரைத்துறை வட்டாரத்தில் குவியும் கண்டனங்கள்

0
Kollywood Actresses Condemns Jeyaraj Fenix Death

ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்ததாக கூறி, விசாரனைக்கு அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் மீண்டும் வீட்டிற்கு சடலமாக தான் வந்தார்கள். 

கடையை மூட சொல்லும் போது இருதரப்பிற்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கைது செய்யப்பட்டுதாக கூறப்படுகிறது. காவல் நிலையத்தில் அப்பா ஜெயராஜை அடிக்கும்போது, அப்பா உடல்நிலை சரியில்லாதவர் அடிக்காதீர்கள் என மகன் பெனிக்ஸ் தடுக்க அவரையும் தாக்க ஆரமித்துள்ளனர். இருவரையும் ஈவு இரக்கமின்றி அப்பா, மகன் இருவரையும் தாக்கியுள்ளனர், மறுநாள் இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும், கோவில்பட்டி கிளை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அங்கு முதலில் உடல் நலம் பாதிக்கப்பட்ட பென்னீஸ் மாரடைப்பால் உயிரிழந்தார். மறுநாள் அவரது தந்தை ஜெயராஜ் மரணமடைந்துள்ளார். இந்த செய்தி தற்போது இந்தியா முழுவதுமே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் கண்டனக்குரல்கள் மேலோங்கினாலும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் பெரிய அளவில் அரசு தரப்பில் எடுக்கவில்லை.

Kollywood Celebrities wants Justice for Jeyaraj and Fenix

 

அரசியல் கட்சிகள் துவங்கி திரைத்துறையை சேர்ந்த செலிப்ரிட்டிகள் பலரும் தங்களது கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகை பிரியா பவானி ஷங்கர், “செய்திப் பிரிவில் வேலைக்கு சேர்ந்த முதல் நாள் எங்க chief சொன்னாரு, நம்மை சுற்றி அநீதி, பயங்கரங்கள் தினம் தினம் ஆயிரக்கணக்குல நடந்துகிட்டு தான் இருக்கு. ஆனால் வெகு சில சம்பவங்கள் தான் நம்ம பார்வைக்கு வரும். அப்படி வெளிச்சத்தை பார்க்கும் பயங்கர சம்பவங்கள், மாற்றத்தை ஏற்படுத்த, அதுபோல் இன்னொரு சம்பவம் நடக்காமல் தடுக்க ஒரு பாடமாக இருக்கனும். அது தான் நாம பாதிக்கப்பட்டவங்களுக்கு செய்யக்கூடியது. சாமானியர்களிடம் காட்டப்படும் அதிகாரத்தின் வீரியம், செல்வாக்கு நிறைந்த குற்றவாளிகளிடம் அடங்கிக்கிடகிறது. இது மரணம் இல்லை. கொலை. Suspension, transfer இதற்கான தண்டனை இல்லை. அரசாங்கமும் சட்டமும் எடுக்கப்போகும் நடவடிக்கை ஒரு குடும்பத்திற்கு மட்டும் இல்லை ஒட்டு மொத்த சாமானியர்களுக்குமான பதில்” என பதிவிட்டுள்ளார்.

Kollywood Actresses Condemns Jeyaraj Fenix Death

நடிகை நிவேதா பெத்துராஜ், “ஜார்ஜ் ஃபிளாய்ட் சம்பவம் என்னை பல நாட்கள் பாதிப்பு அடைய செய்தது. நான் இதுகுறித்து ஆழமாக யோசித்தேன். சரி, அது அமெரிக்கா.. நம்ம ஊரு எவ்வளவோ தேவலைன்னு நினைச்சேன். ஆனால் ஜெயராஜ் மற்றும் ஃபென்னிக்ஸ் ஆகியோர்களுக்கு நடந்த கொடுமையை கேள்விப்பட்ட பின்னர் மனிதாபிமானம் எங்கே என்ற கேள்வி எழுகிறது” என தன்னுடைய கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.

Kollywood Actresses Condemns Jeyaraj Fenix Death

நடிகை நிவேதா தாமஸ், “கடவுள் அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருக்கிறார், குற்றவாளிகளின் இந்த மனிதாபிமானமற்ற செயலுக்காக சட்டப்படி தண்டிக்கப்படும் வரை உங்கள் குரலை உயர்த்திக் கொள்ளுங்கள்! Justice! Justice!!” என தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.

Kollywood Actresses Condemns Jeyaraj Fenix Death

 

 

———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்  

 

 

👉 ஜோதிகா, கீர்த்தி சுரேஷை தொடர்ந்து OTT -ல் வெளியாகும் வரலக்ஷ்மியின் திரைப்படம்!

👉 சாய் பல்லவி நடித்தால் நான் விலகி கொள்கிறேன் ராஷ்மிகா!

👉 புல்லட் ஓட்ட கற்றுக்கொள்ளும் போது தவறி விழுந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்!

👉 சுஷாந்த் சிங் நடித்த கடைசி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி!

👉 சமந்தா முத்தமிட்ட நபருக்கு கொரோனா பாதிப்பு? உண்மை நிலவரம்

 

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...