37 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அபார வெற்றி!

0
Kolkata Knight Riders Won the Match

13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 12-வது போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் துவங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களை எடுத்தது. இதன்மூலம் ராஜஸ்தான் அணிக்கு 175 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

Kolkata Knight Riders Won the Match
Kolkata Knight Riders Won the Match

இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் டாம் குரனை தவிர, மற்ற அனைவருமே சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பில், 137 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 37 ரன்கள் வித்தியாசத்தில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். ராஜஸ்தான் அணியில் டாம் குரன் 54 ரன்கள் எடுத்திருந்தார்.

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...