‘கொலை’ திரைப்பட விமர்சனம் | Kolai Movie Review & Rating
படக்குழு:
நடிகர்கள்: விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாக்ஷி சவுத்ரி, ராதிகா சரத்குமார், ஜான் விஜய் மற்றும் பலர்.
இசை: கிரீஸ் கோபாலகிருஷ்ணன்
ஒளிப்பதிவு: சிவகுமார் விஜயன்
எடிட்டிங்: செல்வா RK
தயாரிப்பு: Infiniti Film Ventures & Lotus Pictures
இயக்கம்: பாலாஜி K குமார்.


கதைச்சுருக்கம்:
படத்தின் துவக்கத்தில் பிரபல பாடகி ஒருவர் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். பிரபலமாக மாறி வரும் நேரத்தில் யார் இந்த கொலையை செய்தது? என கண்டறிய கதாநாயகன் விஜய் ஆண்டனி களமிறங்க, இறுதியாக கொலையாளியை கண்டறிந்தாரா? இதன்மூலம் என்னென்ன சிக்கல்களை சந்தித்தார்? என்பதே கொலை படத்தின் கதைச்சுருக்கம்.


FC விமர்சனம்:
அறிமுக இயக்குனர் பாலாஜி K குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாக்ஷி சவுத்ரி ஆகியோர் நடிப்பில் இன்று(21.7.23) வெளியாகியுள்ள கொலை திரைப்படம் எப்படி இருக்கு என்பதை விமர்சனத்திற்குள் சென்று பார்ப்போம்.
நடிகர் & நடிகைகள்:
கதாநாயகன் விஜய் ஆண்டனிக்கு ஏற்ற கதாப்பாத்திரம் தான், எந்தவொரு ரியாக்ஷனும் இல்லாமல் இருகிய முகத்துடன் படமுழுக்க செல்கிறார். நடிகைகள் ரித்திகா சிங், மீனாட்சி இருவருக்குமே பெரிதாக சொல்லும்படி இல்லை என்றாலும் கொடுத்த பாத்திரத்தை அழகாகவும், நிறைவாகவும் செய்துள்ளனர். இதுதவிர வரும் துணை கதாப்பாத்திரங்கள் பெயரவில் வந்து செல்கின்றனர்.
டெக்கினிக்கல் டீம்:
இப்படத்தில் பெரிய பலமே சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு தான், அந்தளவு மிக நேர்த்தியாக காட்சிகளை படமாகியுள்ளார். அதற்கு மெருகேற்றி கதைக்களத்திற்கு ஏற்ற சிந்தனையை கலர்டோன் மூலம் கொண்டு வந்திருக்கிறது DI டீம். எடிட்டிங் & இசை ரெண்டுமே ஓகே ரகம்தான்.


நிறைகள்:
மேற்கூறியது போல் இப்படத்தின் நேர்த்தியான விஷுவல்ஸ் மட்டுமே பாராட்டுக்குரிய ஒன்றாக அமைந்துள்ளது.
குறைகள்:
முதலில் இப்படத்தின் திரைக்கதையே ரொம்ப மோசமாக அமைந்துள்ளது. யார் கொலையாளி? என துப்பறியும் வகையில் ஆயிரக்கணக்கான படங்கள் உலகமுழுக்க வந்துள்ளது. ஆனால், விறுவிறுப்பில் ரசிகர்களை ஈர்த்த படங்கள் மட்டுமே வெற்றியடைந்துள்ளது. அந்த வகையில், ஒரு ஷார்ட் ஃபிலிம் எடுக்கக்கூடிய திரைக்கதையை வைத்துக் கொண்டு, சுற்றி வளைத்து நம் பொறுமையை சோதித்து பார்த்துள்ளனர். கதாநாயகன் முதற்கொண்டு எந்தவொரு கேரக்டருமே முறையாகவும், அழுத்தமாகவும் இல்லாதது கூடுதல் மைனஸ். இப்படி கிரைம் த்ரில்லர் படங்களில் வரும் எந்தவொரு சுவாரஸ்யமும் இப்படத்தில் இல்லை. (இதுல என்னமோ ஹாலிவுட் படம் எடுப்பதாக நினைத்துக் கொண்டு பல இடங்களில் ஆங்கிலத்தில் மட்டுமே வசனங்களை அமைத்துள்ளனர்).
இறுதியாக, ஒருவரியில் சொல்ல வேண்டுமென்றால் கொலை – தற்கொலை(படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு).
Kolai Movie Film Crazy Rating: 2 /5
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண