‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு அசத்தல் நடனம் ஆடிய நடிகை கிரண்!

0
Kiran Rathod Steps for Vaathi Coming Song

தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கிரண் ராத்தோட். இப்படத்தைத் தொடர்ந்து வில்லன், வின்னர், அன்பே சிவம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

Kiran Rathod Steps for Vaathi Coming Song
Kiran Rathod

எனினும் குறிப்பிட்ட காலத்தில் படவாய்ப்புகள் குறைய திரைத் துறையில் இருந்து படிப்படியாக வெளியேறினார். கடைசியாக ஆம்பள, முத்தின கத்தரிக்காய் ஆகிய படங்களில் கதாப்பாத்திர வேடத்தில் நடித்திருந்தார். முற்றிலும் வாய்ப்புகள் குறைய தனது கவனத்தை சமூக வலைத்தளங்கள் பக்கம் திருப்பினார். மிகவும் கவர்ச்சியான உடையிலும், போஸ்களிலும் இருக்கும் படங்களை பதிவேற்ற ஆரமித்தார். இதற்கு காரணம் திரைத்துறை வட்டாரத்தில் இருப்பவர்கள் கவனம் பெற தான் என்றாலும் அது நிறைவேறியதாக தெரியவில்லை. இந்நிலையில் தற்போது இணையத்தில் டிரன்டிங் அடிக்கும் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு மேடையில் விஜய் ஆடிய நடனத்தை ஆடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் கிரண். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

வீடியோ: 

 

 

 
 
 

  செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...