13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 13-வது போட்டியில் ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், KL ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது, இதனால் முதலில் பேட்டிங் துவங்கிய மும்பை அணியில் துவக்க வீரர்களாக ரோகித் ஷர்மா மற்றும் குவான்டன் டிகாக் களமிறங்கினர். அதில் டிகாக் ரன் ஏதுமின்றி அவுட் ஆக, ரோகித் ஷர்மா(70) அதிரடியை காட்ட துவங்கினார். அவரைத் தொடர்ந்து இறுதியில் பொல்லார்ட்(47) மற்றும் ஹார்த்திக் பாண்டியா(30) கூட்டணி வழக்காமான அதிரடியை காட்டி, ரன்களை குவிக்கத் துவங்கியது. இறுதியாக , 20 ஓவர் முடிவில் மும்பை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை எடுத்துள்ளது. இதன்மூலம் பஞ்சாப் அணிக்கு 192 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்.


செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…