துல்கர் சல்மானின் ‘கிங் ஆப் கோதா’ பட டிரைலர் தள்ளிவைப்பு:
துல்கர் சல்மான் நடிப்பில் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கிங் ஆப் கோதா’. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி, ரித்திகா சிங் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் டிரைலர் இன்று(ஆக.9) மாலை வெளியாகவிருப்பாதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் மலையாளத்தில் பல வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குனர் சித்திக் நேற்று காலமானதால், அவருக்கு மரியாதை செய்யும் விதமாக இன்று டிரைலர் வெளியாகவில்லை எனவும், விரைவில் புதிய தேதி அறிவிக்கப்படுமெனவும் படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண