‘கிங் ஆஃப் கோதா’ திரைப்பட விமர்சனம் | King Of Kotha Movie Review

0
King Of Kotha Movie Review
King Of Kotha Movie Review

‘கிங் ஆஃப் கோதா’ திரைப்பட விமர்சனம் | King Of Kotha Movie Review

படக்குழு:

நடிகர்கள்: துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லக்ஷ்மி, பிரசன்னா, ஷபீர், அனிகா சுரேந்திரன் மற்றும் பலர்.

இசை: ஜேக்ஸ் பிஜாய், ஷான் ரஹ்மான்

ஒளிப்பதிவு: நிமிஷ் ரவி

எடிட்டிங்: உமா ஷங்கர் சத்பதி

தயாரிப்பு: Wayfarer Films & Zee Studios

இயக்கம்: அபிலாஷ் ஜோஸ்லி.

King Of Kotha Movie Review
King Of Kotha Movie Review

கதைச்சுருக்கம்:

கோதா என்ற ஊருக்கு டிரான்ஸ்ஃபரில் வரும் போலீஸ் அதிகாரி ஒருவர், மிடுக்காக வந்தவுடன் அந்த ஏரியாவில் ரவுடித்தனம் செய்பவர்கள் தினமும் ஸ்டேஷன் வந்து தான் கையெழுத்து போட்டு போக வேண்டுமென புதிய ரூலை கொண்டு வருகிறார். ஆனால் இதை கேட்ட அங்கு இருக்கும் கண்ணன் பாய் என்கிற பெரிய டான் இவரை பொளந்து கட்ட, அந்த டானை ராஜதந்திரம் மூலமாக அவன் வழியிலே சென்று பழிவாங்க அடிபட்ட போலிஸ் திட்டம் தீட்டுகிறார். அப்படி அவர் என்ன திட்டம் தீட்டினார்? இதில் ஹீரோவின் பங்கு என்ன? என்பதே படத்தின் முழுக் கதை.

King Of Kotha Movie Review

FC விமர்சனம்:

துல்கர் சல்மான் தயாரித்து, நடித்து இன்று(ஆக. 24) உலகமுழுவதும் வெளியாகியிருக்கும் ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படம் எப்படி இருக்கு? என்பதை வாருங்கள் விமர்சனத்திற்குள் சென்று பார்ப்போம். நடிகர்களை பொறுத்தவரை நாயகன் துல்கர் சல்மான் சாக்லேட் பாயாக பார்த்த இவரை கேங்க்ஸ்டராக காட்ட முயற்சி செய்திருக்கிறார்கள். அந்த பாத்திரத்தையும் நேர்த்தியாகவே கையாண்டுள்ளார். ‘டான்ஸிங் ரோஸ்’ ஷபீர் இன்னொரு ஹீரோ எனவே சொல்லலாம், அந்தளவு முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரம் அவரும் குறையில்லாமல் அதை செய்து முடித்துள்ளார். இதைத் தவிர வரும் ஐஸ்வர்யா லக்ஷ்மி, பிரசன்னா, செம்பன் வினோத் ஆகிய பாத்திரங்களுக்கு ஸ்க்ரீனில் பெரிதளவு வாய்ப்பு இல்லை.

80, 90களில் கதைக்களம் இருப்பதால் பிரீயட் காட்சிகளை குறை இல்லாமல் நன்றாகவே திரையில் காட்டியுள்ளனர். ப்ரொடக்ஷன் டிசைன் டீம் மற்றும் நிமிஷ் ரவி ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிதளவு கைகொடுத்துள்ளது. அதிலும் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி மிரட்டலின் உச்சம். பாடல்கள் பெரிதாக கவரவில்லை என்றாலும், ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை படத்திற்கு மேலும் உயிர்ப்பை கொடுத்துள்ளது.

கதையை பொறுத்தவரை காலம் காலமாக வரும், நாம் பார்த்து சலித்த கேங்க்ஸ்டர் கதைதான் என்றாலும், இப்படத்தின் திரைக்கதை அதைவிட சலிப்பு தட்டும் விதத்தில் தான் அமைந்துள்ளது. அடுத்து என்ன என்பதை எளிதாக யூகிக்கக் கூடிய அளவில் தான் திரைக்கதை உள்ளது, புதிதாக ஒன்றுமில்லை. அதிலும் படத்தின் இரண்டாம் பாதி கூட ஓரளவு பரவாயில்லை, முதல் பாதி தான் ரொம்பவும் பொறுமையை சோதிக்கிறது. கேங்க்ஸ்டர்(கமெர்ஷியல்) படம் என்பதால் இதில் லாஜிக் குறைகள் ஏராளம். கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி, படத்தின் இடையில் வரும் சிறிய டுவிஸ்ட் இதைத் தவிர ‘கோதா’ வில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஒன்றுமில்லை. மொத்தமாக சொல்லனும்னா ரொம்பவும் ஆவ்ரேஜ் ரகம்தான்…

King Of Kotha Movie Film Crazy Rating: 2.5 /5

 

இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண